எதிர்காலம் கணிக்கும் ஏற்றம்.
அந்தோனியார் தீய வாழ்க்கை வாழ்ந்தவ ஓர் அதிகாரிக்கு அவர் முன் முழங்காலிட்டு வணக்கம் கூறி வந்தார். தன்னை கேலி செய்வதாக நினைத்து அந்த அதிகாரி கோபம் கொண்டு " உன்னை என் கையில் குத்தி கொலை செய்ய விரும்புகிறேன் ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுத்து நிறுத்துகிறது " என்றான் அந்தோணியார் மறுமொழியாக " நான் உம்மை கேலி செய்யவில்லை ஆனால் இறைவனால் நீர் தேர்ந்தெடுக்கப்பட்டதால் உமக்குக் கூறுகிறேன் நீ இயேசு கிறிஸ்துவுக்காக மரித்து எனக்கு முன்பாக விண்ணுலகில் இருப்பீர் " என்றார் இதைக் கேட்ட அந்த அதிகாரி மிகவும் ஏளனமாகச் சிரித்தார். ஆனால் அந்த அதிகாரி ஒருநாள் மனம் திரும்பினார். ஆண்டவர் வாழ்ந்த பாலஸ்தீனத்துக்கு யாத்திரையாகச் சென்று கொண்டிருந்த போது சில தீயவர்கள் அவர் கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்தால் அவரை கொலை செய்தார்கள். வருமுன் காக்கும் வரம் பெற்ற அந்தோனியாரின் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. இதை அறிந்த பலரும் அந்தோணியாரின் இந்த அற்புத ஆற்றலை வியந்து பாராட்டினர்.