Wednesday, September 26, 2018

அற்புதம் 5 காணாமல் போனது தானாக வந்தது.

காணாமல் போனது தானாக வந்தது.


சிறந்த மறையுரையாளர் அந்தோணியார். மறையுரை ஆற்றும்  போதெல்லாம் தன் கையில் திருச்சிலுவை எந்தியிருப்பார். அசிசியார் அந்தோணியாரை  இறையியல் போதிக்க  நியமித்தார். இரண்டு ஆண்டுகளாக இளம் துறவிகளுக்கு வேதாகமம் கற்றுக் கொடுத்தார் அதை அவருக்கு உண்மையிலேயே கடவுள் மனிதன் மேல் கொண்ட அன்பின் சரித்திரம் ஆகவே பட்டது ஒரு மெழுகுவர்த்தி இன்னொன்றோடு ஒளியை பகிர்வது போல் எதையும் இழப்பதில்லை தான் பெற்ற வேதாகம பக்தி பரவசத்தோடு போதித்தார் ஜெபிக்காத மனிதன் வேரில்லாத மரம் என்று இளம் துறவிகளை ஜெபத்திலும் இறைவனின் அன்பிலும் வளரச் செய்தார் அவர்களும் இறைவன் பால் ஈர்க்கப்பட்டு கடவுளின் அன்பை அறிந்தவர்களாக அவரை அன்பு செய்யத் துவங்கினார்கள் இளம் துறவிகளை தெளிவாக விளங்கும்படி அதை மிக அழகாக விளக்கி ஒரு புத்தகம் எழுதினார் ஒவ்வொரு பக்கமாக அவர் கை அதை எழுதிய புத்தகம் ஒரு நாள் திடீரென்று மறைந்து விட்டது எல்லோரும் எல்லா பக்கத்திலும் தேடியும் கிடைக்கவில்லை அந்தோணியார் உருக்கமாக வேண்டிக்கொண்டார் அடுத்த நாளே ஓர் இளம் துறவி அப்புத்தகத்தை திரும்பிக் கொண்டு வந்து நான் தான் இதை திருடினேன் என்று திருப்பிக் கொடுத்தார் எதற்காக திருடி நீர் என்று அந்தோணியார் கேட்டார் அதற்குள் இளம் துறவி கதறி அழ ஆரம்பித்தார் நான் சபையை விட்டு போக நினைத்திருந்தேன் வெளியில் சென்றவுடன் இப்புத்தகத்தை நானே எழுதினேன் என்று எல்லோரையும் நம்ப வைத்தேன் அப்போது எல்லோரும் என்னை புகழ்வார்கள் என்று எண்ணினேன் என்றார் அந்தோணியார் அவரை மன்னித்து தொடர்ந்து சபையில் இருக்கச் செய்தார் பின்னாட்களில் அவர் அந்தோணியாரின் தீவிர பக்தரான மனிதராவார் மறப்போர் தெய்வமாவார் என்று கூட காணாமல் போகும் பொருட்களை கண்டெடுக்க செய்யும் ஆற்றல் மிக்கவராக அந்தோணியார் விளங்குகிறார் அவரின் இந்த அதிசயமான ஆற்றலின் நிமித்தம் கடந்த 200 ஆண்டுகளாக அவரிடம் கேட்கப்பட்ட அட்டைகள் வழங்கப்படுவதில்லை என்பது நாம் அறிந்ததே.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .