Wednesday, October 10, 2018

அற்புதம் 19 கொதிநீரும் குழந்தையும்



தூய அந்தோணியார் ஒரு தலைசிறந்த போதகர். நாவன்மை மிக்க அவரது பேச்சு கேட்போரின் உள்ளங்களை ஊடுருவிப் பாய்ந்தது. அவரது பேச்சு வன்மையால் மாற்று மதத்தவரின் வாயையே அடக்கினார். ஏழைகளுக்கும் அறியாமையில் அமிழ்ந்து கிடந்த அவர்களுக்கும் அறிவுரை புகட்டினார். அந்தோணியாரின் மறையுரைகள் ஆற்றல் மிக்கவையாக இருந்ததோடு மிகுந்த கருத்துச் செறிவு உள்ளதாகவும் இருந்தது.
 எடுத்துக்காட்டாக வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றன இவற்றை நாம் நல்ல உள்ளத்தோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை விளக்க 1226 ஆம் ஆண்டு மரித்த ஆன்மாக்களின் திருநாளன்று தூய பவுல் ஆலய திடலில் இதுபற்றி ஒரு மறையுரையாற்றினார். அக்கருத்தை எடுத்துக்கொண்டு விளக்கத்துடன் மாலையில் அழுகை நமது விருந்தினர் காலையில் மகிழ்வு நமது விருந்தாளி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இவ்வுரையை கேட்க வெகு தொலைவிலிருந்து ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர்.
 
குழந்தையை உயிரோடு எழுப்பியது.

 பெண்மணி ஒருத்தி அந்தோணியாரின் மழை உரையைக் கேட்க ஆவல் கொண்டாள். தன் குழந்தையைத் தொட்டிலில் கிடக்கும் வீட்டில் தனியே விட்டுவிட்டு அந்தோணி அறிவுரையை கேட்க ஓடோடி வந்து இருந்தான். மழை உரையைக் கேட்பதற்கு இனிமையாகவும் மனதுக்கு நிறைவாக மகிழ்ச்சியாகவும் இருந்தது . ஆனால் அவள் வீடு திரும்பியதும் தனது குழந்தை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அழுது துடியாய் துடித்தாள். அந்தோணியாரிடம் ஓடிச் சென்று முறையிட்டால் நடந்தவற்றை அழுதவாறு எடுத்துக் கூறினால் உனது குழந்தையை விளையாடுகிறது. போய் பார் என்றார் அந்தோணியார்.

 குழந்தையின் விசுவாசத்தோடு வீடு திரும்பினாள். என்ன ஆச்சரியம் குழந்தை கைகால்களை அசைத்து அழகாக விளையாடிக் கொண்டிருந்தது. அவள் தன் வாழ்நாளெல்லாம் இறைவனுக்கும் அந்தோணி யாருக்கும் நன்றி உள்ளவர்களாக வாழ்ந்துவந்தாள். 

கொதிநீரில் விளையாடிய குழந்தை.

 அதே தினத்தில் வேறொரு பெண் புனிதரின் உரையைக் கேட்க மிகுந்த ஆவலுடன் வெகுதொலைவிலிருந்து நடந்து வந்திருந்தாள் அந்தோணியாரின் உரையைக் கேட்க வேண்டும் என்ற தணியாத ஆவல் அடுப்பில் எரியும் தீயும் அதன் மேல் பானையில் வைத்து இருந்த பெண்ணையும் மறந்து அவசரத்தில் வந்துவிட்டால் வீட்டிலிருந்த தனது குழந்தையும் எடுத்து வர மறந்து விட்டால் மறையுரை முடிந்ததும் பெண் நீர் மற்றும் குழந்தையின் நினைவு வரவே பதறியடித்து ஓடி வந்தாள் வீட்டில் அவளது குழந்தையைக் கொதிக்கும் அந்த பெண் நீரை அள்ளி விளையாடிக்கொண்டிருந்தது புனிதரின் அருளால் குழந்தைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

 குழந்தை புன்னகையுடன் தாயை பார்த்து அவரின் உரையில் ஆர்வம் காட்டிய மக்கள் ஏராளமானோர் அவரது மதுரையின் சிறப்பை அவர் மீது மக்கள் காட்டிய ஆர்வத்தையும் விருப்பத்தையும் இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன அன்று அந்தோனியார் எடுத்துக்கொண்ட பொருள் இன்பமும் துன்பமும் வாழ்வில் இரவும் பகலும் போல இன்பம் இருந்தால் அதை எப்படி மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறோமோ அதே போன்று துன்பத்தையும் இயேசுவைப்போல பொறுமையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்பதே அதற்கு ஆதாரமாக மேற்கோள் விளக்கமாக எடுத்துள்ளார் அதை நாமும் நம் வாழ்விற்கான பாடமாக ஏற்று தியானிப்போம்.


இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்காக  செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .