Tuesday, October 9, 2018

அற்புதம் -18. அந்தோணியார் கையில் அற்புத குழந்தை இயேசு.



ஒருநாள் அந்தோணியார் லிமோசில் இருந்த போது தன் நண்பனும் அரசனுமான டீசோ  பிரபுவின் வீட்டில் தங்க வேண்டி இருந்தது. அவருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப் பட்டிருந்தது. அங்கு அந்தோணியாரின் வாழ்வில் மிக முக்கியமான அதிசயம் நடந்தது.

 அந்தோணியார் எவ்வாறு ஜெபிக்கிறார் என்று அறிய அரசன் டிசோவுக்கு  ஆவல். ஏனெனில் அவர் உண்மையிலேயே ஒரு புனிதர் என்று நம்பினார். ஆகவே இரவில் அவர் தங்கியிருந்த அறை கதவை மெதுவாகத் திறந்து பார்த்தான். அங்கு அவன் கண்டது அவனுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. அந்தோணியார் ஒளியின் மத்தியில் நின்று கொண்டிருந்தார். அவரது கையில் விவிலிய புத்தகம். அதன்மீது குழந்தை இயேசு முழந்தாளிட்டு. அந்தோணியாரை நோக்கி  தன் இரு கரங்களையும் அவர் நோக்கி விரித்தவாறு காணப்பட்டார். இந்த நிகழ்வு நடந்த இடத்தில் பழமை வாய்ந்த கோவில் ஒன்று இருக்கிறது. அந்த கோவிலின் ஜெபக்கூட்டத்தில் மேற்கூறிய நிகழ்ச்சி பற்றிய சித்திரமும் எழுத் தும் வரையப்பட்டுள்ளன. குழந்தை இயேசுவை  கையிலேந்திய இந்த அந்தோணியாரின் சுரூபம்  முன்பு கேட்கும் வரங்களை பெற்று மகிழும் மக்கள் ஏராளம்.

 அந்தோணியாரின் இறை பக்தியையும் ஜெபத்  திறனையும் கண்ட அசிசியார் பதுவை  நகருக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆர்செல்லா  என்னுமிடத்தில் இருந்து பிரான்சிஸ்கன் சபை,கிளாரம்மாள் கன்னியர்  சபை, பிரான்சிஸ்கன்   மூன்றாம் சபை ஆகியவற்றைஅந்தோணியாரின் பொறுப்பில்  விட்டுருந்தார் . இச்சபைகளின்  நிர்வாக பொறுப்பு இதனிடையே ஆன்மீக பணிகளில் ஆர்வம் மிக்கவராக அந்தோணியார் இருந்தார்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்காக  செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .