பதுவை நகரில் லியோனார்டோ என்ற ஓர் இளைஞன் கொள்ளாத போக்கிரியாக இருந்தான். அவனை போல் பொல்லாதவன் அந்த ஊரிலே யாரும் கிடையாது. தகாத செயல்கள் எல்லாம் செய்து வந்தான். அவனுடைய விதவைத் தாயை காலால் எட்டி உதைத்து கொடுமைப்படுத்தும் கொடியவனாக இருந்தான்.
அன்றைய மறையுரையில் தான்தோணியார் " தகப்பனை ஏளனம் செய்யும் கண்களையும், வயது முதிர்ந்த தாய் எதிர்கொள்ளும் விழிகளையும் கழுகு குஞ்சுகள் தின்னட்டும்" என்று நீதிமொழி என 30 ஆம் அதிகாரம் 17 வது வசனம் மேற்கொள்காட்டி மறை உரை ஆற்றினார். இந்த அறிவுரையை கேட்ட லியோனார்டோ அந்தோணியாரிடம் ஓப்புரவு செய்து பாவ மன்னிப்பு கேட்ட போது தான் தன் தாயை கொலை செய்த குற்றத்தையும் அறிக்கையிட்டான். பாவமன்னிப்பும் பெற்றான்.
அன்று மறையுரையில் "பெற்றோரைப் பேணி காக்க வேண்டும் அவர்களை எட்டி உதைத்த காலை வெட்டி எறிவது" எனமொழிந்தார். அந்தோணியாரின் திரு உரையை கேட்ட இளைஞன் தான் தன் தாயிற்கு செய்த இழைத்த கொடுமைகளையும் அவர்களை உதைத்தது எண்ணி தான் செய்த பாவத்தின் மிகுந்த வருத்தப்பட்டான். அதற்கு எப்படியாவது பரிகாரம் செய்ய வேண்டும் என அவனது மனம் அவனை உறுத்தியது. மறையுரை முடிந்து வீட்டுக்குச் சென்றவுடன் கோடாரியை எடுத்து தனது வலது காலைத் துண்டித்து விட்டான் ரத்தவெள்ளத்தில் கிடந்த தனது மகனைக் கண்ட தாய் மிகவும் பதறினாள் அந்தோணியாரிடம் கோபத்தோடு ஓடி வந்து நடந்தவற்றை கூறினான்.
இதைக் கேட்ட அந்தோணியார் என்னுடைய மறையுரை அவனுடைய அவனிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் அறிந்திருக்கவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன் என்று கூறினார். அந்த தாயுடன் அவர்களுடைய வீட்டிற்கு வந்து துண்டாக வெட்டப்பட்டு கிடந்த காலை தனது கரங்களால் எடுத்து சேர்த்து வைத்த கடவுளுக்கு புகழ்பாடி முடிந்த காளையை ஒட்ட வைத்தார். இரண்டு துண்டுகளும் பழையபடி நன்றாக ஒட்டிக் கொண்டன. அந்த இளைஞனிடம் " தம்பி இறைவன் பாவங்களை தான் வேறு றுகிறார் பாவிகளை அல்ல நீ உன் குற்றத்தை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்ட போதே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நீ புதிய மனிதனாகிவிடுவாய். பாவத்தையும் சூழ்நிலைகளையும் மட்டும் விலகினாலே போதும். இனி உன் தாய்க்கு நீ தான் ஆதரவு என்று உணர்ந்து அன்பு செய். பழைய வாழ்க்கையின் அவலத்தையும் அலங்கோலத்தையும் பார்த்து கொண்டிராது. மனந்திரும்பு. கடவுளிடம் திரும்புவோர் பாதுகாக்கப்படுவர்" என்று அறிவுரை கூறிவிட்டு வந்தார்.
நாமும் பாவிகளுக்கு வெளிச்சம் கொடுத்தவரான புணித, தூய அந்தோணியாரை நோக்கி செவி கொடுப்போம்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். மேலும் எனக்காக செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .