Thursday, October 18, 2018

அற்புதம் - 25 : கல்லும் கனியும் கள்வரும் மாறினர்.



பதுவா நகரை பயங்கரமாக நடுங்க  வை த்துக் கொண்டிருந்தது ஒரு கள்வர் கூட்டம். இவர்கள் அந்தோனியார் உடைய ஆற்றல்மிக்க மறையுரைகள். அவர்தம் வியத்தகு செயல்கள். அவரது ஒழுக்கம். ஆகியவை பற்றியெல்லாம் கேள்வியுற்ற இவை அனைத்தும் உண்மைதான் என கண்டறிய ஆவல் கொண்டனர். அவருடைய பேச்சைக் கேட்க ஒருநாள் வந்தனர்.

வரும் வழியில் நாமோ கடவுளுக்கும் எந்த மனிதனுக்கும் சற்றும் அஞ்சாத நெஞ்சம் படைத்தவர்கள். கடின உள்ளம் கொண்டவர்கள். நம்ம இந்த போதகர் மனம் திரும்புவாரா? அதில் இவர் மெய்யாகவே அற்புதம் தான். ஆனால் நம்மை அசைக்க எவராலும் முடியுமா? வீராப்புடன் நகைச்சுவையாக  பேசிக்கொண்டனர்.

 அன்றே அவர்கள் அந்தோணியாரின் அமிர்தமான வார்த்தைகளடங்கிய அற்புத மறையுரை ஒன்றை கேட்டனர். அன்று அந்தோணியார் கடவுள் படைப்பில் யாரும் பட்டினி கிடப்பதில்லை .அதிலும் கடவுள் நம்பிக்கையோடு நாடுபவர்களுக்கு எதுவும் குறைபடாது என்ற கருத்தை, சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது திருவழிபாடு 34: 10 என்றதுக்கு மேற்கோளோடு மறை உரை ஆற்றினார்.

அவரது மழை அமுதமொழி இவர்கள் காதில் பாயவே அவர்கள் மனம் மாறினர். அவர்கள் அந்த நாள் வரை செய்துள்ள அக்கிரம செயல்களை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக படம் போல் இவர்கள் மனத் திரையில் தோன்றின. அதிலும் அச்சம் அவர்களை ஆட்கொண்டது. பிறகு அவர்கள் அந்தோணியாரை கண்டு அவர்கள் செய்த பாவங்களுக்காக பாவமன்னிப்பு பெற்றனர். இதயத்தை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் மிக்க அந்தோணியார் அவர்களுள் சிலர் மனப்பூர்வமாக மன மாற்றம் பெறவில்லை என்று அறிந்து அவர்களிடம் மறுபடியும் நீங்கள் திருட்டுத் தொழிலுக்கு திரும்புவதில் பெரும் துன்பங்களுக்கு உட்பட்டு அவலமாக மரீப் பிகள். ஆனால் நீங்கள் இப்போது எனக்கு கொடுத்த வாக்குப்படி நடப்பீர்கள் அதில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து சமாதானமாக மரி க்கிறார்கள் என்று அவர்களை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பினார்.

 அவர்களில் சிலர் மனந்திரும்பினால் வழிபட்டனர். சிலர் மறுபடியும் திருட்டுத் தொழிலுக்கு தொடர்ந்து. நடந்த மனம் திரும்பியவர்களில் மகிழ்ச்சியாகவும் சமாதானமாகவும் வாழ்ந்து நிம்மதியாக மரித்தனர். பாவ வழியில் தொடர்ந்து நடந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தூக்கு மரத்தில் உயிர் விட வேண்டியதாயிற்று. இப்படியே உலுக்கிய அந்த கவனம் திரும்பியது பெரும் அற்புதமாக இன்றுவரை பேசப்படுகிறது, கள்ளவர்களின் மனம் திரும்புதல் அமைதி பூங்காவாக மாறி போனது.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்காக  செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .