Monday, October 1, 2018

புனித அந்தோனியாரின் புதிய அழைப்பு





புதிய அழைப்பு 

அந்தோணியார் Messina நகரத்தில் இருந்த பிரான்சிஸ்கன் மடத்தில் ஓய்வு எடுத்தார்.மே மாதம் 30,1221 அன்று Assisi நகரிலே பிரான்சிஸ்கன் சபை துறவிகளின் மாநாடு நடைபெற இருப்பதை அரிந்தார் . ஒரு வாரம் கழித்து ஐரோப்பா தேசத்து பிரான்சிஸ்கன் துறவிகள் அர்ச் பிரான்சிஸ் அசிசி யுடன் சேர்ந்து ஜெபிக்கவும், அவருடைய வார்த்தைகளை கேட்கவும் வந்திருந்தனர்.

அந்த மாநாடுக்கு பிறகு அனைவருக்கும் எங்கு பணி புரிய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அந்தோணியார் Monte Paolo என்னும் இடத்திருக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு அவர் ஒரு தனிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஒரு முறை Forli என்னும் இடத்தில் குருப்பட்டம் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது. அன்று பிரசங்கம் செய்யும் துறவிக்கு பிரசங்கம் செய்ய இயலவில்லை. ஒருவரும் பிரசங்கம் செய்ய முன் வரவில்லை. எனவே அந்த மடத்தின் தலைவர் அந்தோணியாரிடம் சென்று அவருக்கு என்ன தோணுகிறதோ அதை பிரசங்கம் செய்ய சொன்னார். அன்று அவர் செய்த பிரசங்கம் அங்கு இருந்த அனைவரயும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. அவர் செய்த பிரசங்கம் பற்றி அர்ச் , பிரான்சிஸ் அசிசியாருக்கு சொல்லப்பட்டது. அசிசியார் அவரை குரு மாணவர்களுக்கும் மற்றும் இத்தாலி முழுவது சென்று இறையியல் போதிக்கவும் சொன்னார.



இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .