போதகர் மற்றும் ஆசிரியர்.
அந்தோணியார் இத்தாலி மட்டும் பிரான்ஸ் தேசம் முழுவதும் பயணம் செய்து போதித்து வந்தார். அவர் பலரை தன்னுடைய பிரசங்கத்தால் சர்வேசுரன் பக்கம் இழுத்தார். அவர் தப்பறைகளுக்கு ஒரு சம்மடியகவே இருந்தார். அந்தோணியார் பிறருடைய பாவங்களை குறித்து அவர்களிடம் நேரடியாகவே பேசினார்.
ஒருமுறை Archbishop Simon De Sully என்பவர் அந்தோணியாரை பிரசங்கம் செய்ய அழைத்திருந்தார். Archbishop தன்னை பற்றி பெருமையாக பேசுவார் என்று எண்ணி இருந்தார். அங்கு பெரும் திரளான மக்கள் கூடி இருந்தனர். அனால் அந்தோணியார் அந்த Archbishop குற்றங்களை அங்கு அந்த மக்கள் முன்னிலையில் சொன்னார். 1223 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவிகளுக்கு என்று ஒரு இறையியல் பள்ளி ஒன்றை அவர் நிறுவினார்.
அர்ச். பிரான்சிஸ் அசிசியார் இறந்த பிறகு மடத்தின் தலைவராக அவரை தேர்வு செய்தனர். 1230 ஆம் ஆண்டு அந்த பதவியை துறந்து மீண்டும் போதிக்கும் அலுவலை செய்தார். அதே வருடம் அந்தோணியார் அப்போது போப்பாண்டவராக இருந்த Gregory IX முன்பு பிரசங்கம் செய்யும் அலுவல் அவருக்கு கிடைத்தது. அந்தோணியார் செய்த பிரசங்கத்தை கேட்ட போப் அவரை "வாக்குத்தத்தின் பெட்டகம்" என்று அழைத்தார். அந்தோணியார் தவக்காலம் முழுவதும் பதுவா நகரிலே போதித்து வந்தார். அதை கேட்பதற்கு ஆயிரகணக்கான மக்கள் அங்கு கூடினர்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். மேலும் எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .