Saturday, November 10, 2018

அற்புதம் - 28 தூரம் வென்ற வீர குரல்



நாவன்மையும் இறையருளும் ஒருசேரப் பெற்ற அந்தோனியாரின் அருள் செயல்களையும் அற்புதமான பேச்சுகளையும் கேள்விப்பட்ட ஒரு பெண்மணி ஒரு முறையாவது தானும் அவரது பேச்சை கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஆனால் துறவிகளின் மட்டிலும் மதத்தில் மிகவும் வெறுப்பும் பகையும் கொண்டிருந்த அவளது கணவனுக்கு பயந்து மறையுரை கேட்கும் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் இருந்தாள்
 ஒருநாள் தன் வீட்டிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் ஒரு மைதானத்தில் அந்தோணியார் பேச வருவதாக கேள்விப்பட்டால் அவரை நேரில் பார்க்காவிட்டாலும் அவரது மறையுரை ஒருமுறையாவது கேட்கலாம் என தனது வீட்டின் மாடியில் ஏறி அந்தோணியார் பேசிய இடம் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள் என்ன ஆச்சரியம் அந்தோணியார் அவ்வளவு தொலைவில் இருந்து பேசிக் கொண்டிருப்பது தனக்கு மிகவும் பக்கத்திலிருந்து கேட்பது போல் கேட்டது.

 மறையுரை முழுவதும் நன்றாகவும் தெளிவாகவும் கேட்டது தான் கண்டு அனுபவித்த இந்த அதிசயத்தை தன் கணவனும் காண வேண்டும் அதன்பின் நம்பிக்கை கொள்வான் என்று மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து நடந்தவற்றை தன் கணவனுக்கு கூறினால் அவன் கேட்கும் படி அவரை மாடிக்கு கூட்டி சென்றால் அந்தோணியார் பேசிக் கொண்டிருந்த திசை நோக்கிப் பார்க்கும் போது அவரது பேச்சு தெளிவாகவும் விவரமாகவும் இருவருக்கும் கேட்டது இதை கண்டு இருவரும் வியப்புற்றனர் இது அந்தோனியாரின் அருஞ்செயல் என உணர்ந்து அன்று முதல் இருவரும் அந்தோணியாரின் மீது விசுவாசமும் நம்பிக்கையும் அன்பும் பற்றுதலும் செம்மையாக வாழ்ந்து வந்தனர் ஆன்மாக்களின் இடத்திற்கு உழைப்பதே அந்தோணியாரின் பணி கடவுளின் கருணை இருந்தால் அவரும் செயல்கள் செய்ய முடிந்தது அடிமைப்பட்டவர்கள் மீட்பரான புனித அந்தோணியாரே உன்னை போற்றுகின்றோம்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்காக  செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும்.