ஒரு பெண்ணின் கணவன் அவளை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். ஒருநாள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கணவன், தன் மனைவியை மூர்க்கத்தனமாக அடித்து வேகமாக கூந்தலைப் பற்றி இழுத்த போது, அவளது கூந்தல் அவன் கையோடு வந்துவிட்டது.
அந்தப் பெண் மிகவும் வேதனையுற்று செய்வதறியாது அந்தோணியாரை நாடி வந்து அழுது புலம்பினாள். அந்தப் பெண்ணின் வேதனையை கண்ட புனிதர் , புன்முறுவல் பூத்து மண்டியிட்டு இறைவனிடம் மன்றாடினார். அவளது கூந்தல் முன்புபோலவே வளர்ந்து விட்டது. அந்த பெண்ணின் வாட்டத்தைப் போக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, இந்தப் புதுமையை கண்ட அவளது கணவன் கடவுளின் கருணை அவள் மேல் எந்த அளவு உள்ளது என்றும், அவளுக்குத் தான் இழைத்த கொடுமையை உணர்ந்து வேண்டும் என்பதும்தான். அவர் எண்ணப்படியே அவன் திருந்தி நல்லவனாக மாறி குடும்பத்தோடு புனித இடம் வந்து ஆசி பெற்றுச் சென்றான்.
