தபசு காலம் முதற்கொண்டு தூய ஆவி திருநாள் வரைக்கும் அந்தோணியார் போது மழை உரையாற்றியும் அறிவுரை கூறியும் வந்தா சென்ற இடங்களில் எல்லாம் மக்களின் வாழ்க்கையை சீர்படுத்திக் சமாதானம் ஏற்படுத்தி வந்தார்.
பெராரா என்ற இடத்திற்கு மறையுரை ஆற்ற சென்றிருந்த சமயம் அந்நகரில் புகழ்வாய்ந்த குடும்பத்தை சார்ந்த ஒரு செல்வந்தன் தனது இளம் மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவள் பெற்ற குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கூறி அந்தோணியாரிடம் வந்து முறையிட்டான் தன் மனைவியையும் மனம் நோக பண்ணினான். இருவரையும் குழந்தையோடு அவர் வரச்சொன்னார் அவர்களிடம் இருந்த குழந்தையை வாங்கி தமது கரங்களில் ஏந்தி கொண்டு ஓ மாசில்லா குழந்தையே உமது பிறப்பின் உண்மையை எல்லோரும் வெளிப்படையாக அறியும்படி இயேசுவின் பெயரால் உனக்குக் கட்டளையிடுகிறேன் வாய்திறந்து பேசுவாயாக என்றார் உடனே குழந்தை சந்தேகம் கொண்ட தன் தந்தை பக்கமாய் திரும்பி இதோ இவரே என் தந்தை என வாய் திறந்து பேசியது. அப்போது அந்தோனியார் அந்த குழந்தையை அதன் தந்தையிடம் கொடுத்து இதோ உன் குழந்தை இதன் மேல் அன்பு செலுத்துவாயாக இதோ இந்த தாய் குற்றமற்றவர் உன் மீது அன்பும் பாசமும் கொண்ட உன் மனைவி உன் அன்புக்கும் கீழ்ப்படிதலும் முற்றிலும் தகுதி உள்ளவராக இருக்கிறாள் அவளை நீ அன்பு செய்வாயாக என்றார் .
குழந்தையே வாய்திறந்து உண்மையை உரைக்கக் கேட்ட கணவன்னது சந்தேகத்தை முற்றிலும் விட்டொழித்து தனது மனைவி மீது சுமத்திய குற்றத்திற்காகவளிடம் மன்னிப்பு கேட்டான் அன்றுமுதல் கணவனும் மனைவியும் சமாதானமாகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.