Thursday, November 22, 2018

அற்புதம் 35 கந்துவட்டிக்காரன் ஐயே கதறிட செய்தா





அக்காலத்தில் பதுவை நகரில் அநியாய வட்டி வாங்குதல் அதிகரித்து வந்தது வட்டியையும்தொகையும் சேர்த்து கொடுக்க முடியாமல் திண்டாடினார் அவற்றை வசூலிப்பதற்காக அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினர் சிறையிலடைத்தும் துன்புறுத்தினர் அந்த ஏழை மக்களின் தன்மையை அந்த பணக்காரர்களின் இரக்கமற்ற இதயங்களையும் அந்தோணியார் புரிந்துகொண்டார்.

சமுதாய அக்கறை கொண்ட அந்தோணியார் அரசு அதிகாரிகளை சந்தித்து தனது நாவன்மையால் ஏழைகளின் கடன் நிவாரணம் பற்றி பேசினார் தமது அறிவுரைகளும் எழுத்து மூலமாக விண்ணப்பம் கொடுத்து சமூக மாற்றம் வேண்டி கடன் நிவாரணச் சட்டம் ஒன்று இது கிழக்கு.பி.1231 ஆம் ஆண்டு சட்ட வடிவம் பெற்று அமுலுக்கு வந்தது.

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் கடன்பட்டவர்கள் சிறைபடுத்தக்கூடாது அவரது சொத்துக்களை இரக்க இன்றி பறிமுதல் செய்யக் கூடாது அநியாய வட்டி வாங்கக்கூடாது மேலும் அந்தோணியார் விருப்பப்படி சட்டம் அமலுக்கு வருகிறது என்றும் சேர்க்கப்பட்டது அந்தோணியார் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடிய போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் 

ஏழைக்கு உதவி செய்கிறவர் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறார். அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார் நீதிமொழிகள் 19 :17 ஆம் வரிகளை எடுத்துக் கூறி ஏழைகளுக்கு தாராளமாய் கொடுக்கும் வேலைகளில் பணமில்லாத வேதனையில் துடிப்பதை அரவணைத்துக் கொள்ளும் படியும் சேவையிலுள்ள வேதனை ஏழைகளுக்கு உதவும் அன்பு வார்த்தைகளால் கந்துவட்டி வசூலில் அவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தினார் ஏழை எளிய மக்களுக்கு ஆறுதலும் பாதுகாவலரான தூய அந்தோனியார்.