குறுகிய காலத்தில் அந்தோனியாருக்கு புனிதர் பட்டம் அளிப்பது சரியல்ல என சிலர் வாதிட ஆயினும் பிரான்சிஸ்கன் சபை குருக்கள் அவர்களும் அதிகாரிகளும் ரோமை சென்று அவருக்கு புனிதர் பட்டம் விரைவில் கொடுக்க கேட்டுகொண்டனர் பதுவை நகரில் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் எல்லா இடங்களுக்கும் சென்று அந்தோணியார் ஆற்றியுள்ள அருண் செயல்களைப் பற்றிய விவரங்களையும் பயனடைந்தோர் மற்றும் மக்களுடைய சாட்சியங்களின் எழுத்துக்களையும் சேகரித்து அவற்றை ஒரு விண்ணப்பம் அனுப்பி வைத்தனர் இவற்றை ஏற்றுக் கொண்ட திருத்தந்தை நமது திருச்சபையின் மிகப்பெரிய அற்புதர் புனித அந்தோணியார் உடைய புனிதத்தையும் ஈடு இணையற்ற வாழ்க்கையும் கண்டோம் என்றாலும் இறைவனை மகிமைப்படுத்தி ஒருவருக்கு இவ்வுலகில் உரிய மதிப்பு மரியாதை கொடுக்க வேண்டும் எனவே திருச்சபையில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள முழு அதிகாரத்தையும் கொண்டு அந்தோணியாரை புனிதர்களின் பட்டியலில் பதிவு செய்கிறேன் என்று கூறி தனது கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தி அந்தோணியார் தூயவர் என அறிக்கையிட்டு புனிதர் பட்டம் அளித்தார் இவ்வாறு அந்தோனியாருக்கு தூயவர் பட்டம் கொடுத்தது போர்த்துக்கல் நாட்டில் உள்ள அந்தோணியார் பிறந்த லிஸ்பன் நகரில் ஆலய மணிகள் ஒலித்தன மக்கள் திகைப்புற்றனர் அந்தோனியாருக்கு தூயவர் பட்டம் கொடுக்கப்பட்டது அறிந்து பேரானந்தம் அடைந்தனர் நன்றி செலுத்தினர் அவருடைய தாயாரும் இரண்டு சகோதரிகளும் மற்றும் உறவினர்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர் இப்போது உலகமெங்கும் இப்புனிதரின் திருவிழா ஜூன் 13ஆம் நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது கோடான கோடி மக்களின் இதயங்களை கவர்ந்த தூயவர் ஆனால் புனித அந்தோணியார் கோடி அற்புதர் என அழைக்கப்படுகிறது அவரை வாழ்த்திப் போற்றுவோம்