தூய அந்தோணியாரே,
சொல்லிலும் செயலிலும்
வல்லவராக்கும் சபையின்
அணிகலனே, கிறிஸ்துவின்
சாட்சியமே, உம்மை
நாங்கள் வாழ்த்துகிறோம் .ஞானத்திலும் இறையன்பிலும்
சிறந்தவர் என்பதில்
நாங்கள் வணக்கம்
செலுத்துகிறோம். உம் வழியாக
கடவுள் எங்களுக்கு
செய்து வருகின்ற
செயல்களுக்காக உமக்கு
நன்றி கூறுகின்றோம்.
தொடர்ந்து நீர்
உதவி செய்து, தூய உள்ளத்தோடும்
நம்பிக்கையோடும் வழியாக
மன்றாடுகிறோம். ஏனெனில்
அன்பும் இரக்கமும்
வல்லமையும் இறைவன்
உமக்கு தந்துள்ளார்
என்று நாங்கள்
அறிவோம். எங்கள்
துன்பங்களையும் துயரங்களையும்
போக்குகிறது. (சிறிது
நேரம் மௌனமாக
ஜெபிக்கவும்) அரவணைத்து
முத்தமிட
குழந்தை இயேசுவின்
மீது நீர்
மிகுந்த அன்பு
கொண்டிருந்த எங்கள்
தேவைகளை அவரிடம்
எடுத்துரைப்பீராக. குழந்தை
இயேசுவோடு நீர்
பெற்ற இறை
அனுபவம் மிக
சக்தி வாய்ந்தது.
உமது பரிந்துரைகளால்
என் தேவைகளை
அறிந்து உதவி
செய்வதாக. அதனால்
எங்கள் மகிழ்ச்சியை
முழுமையடையும். உமது
பெருமை எங்கும்
பரவும். நாங்களும்
இறை சாட்சிகளாக
மாறிய சமூகத்தை
உருவாக்குவோம்! ஆமென்.