Friday, October 5, 2018

அற்புதம்-14 பல்வேறு மொழியினர் புரிந்து கொண்டனர்



புனித அந்தோணியார் இறையியலில் வியத்தகு அறிவாற்றல் உள்ளவராக திகழ்ந்தார். அன்பும் மக்கள்மீதும் நற்செய்தி அறிவித்து அவருக்கு இருந்த தனியாத தாகம் தான் அவரது இறையியல் அழிவுக்கு ஆதாரமாக இருந்தன. அது மட்டுமல்ல அவரது சொல்லும் செயலும் இணைந்து சென்றதால் அவரது வார்த்தைகள் ஆற்றல் மிக்கதாக வெளிப்பட்டன ஒருமுறை அந்தோணியார் ஆலயத்தில் மறை உரை ஆற்றினார். தூய ஆவியின் ஆற்றலால் நிரப்பப்பட்டு திருமறை உண்மைகளை எடுத்து இயம்பினார். விளக்கங்கள் அவர் வாயிலிருந்து ஊற்றெடுப்பதுபோல் தங்குதடையின்றி சரளமாக வெளிவந்தன. ஆனால் அங்கு கூடியிருந்த மக்கள் பல நாட்டிலிருந்தும் வந்திருந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அந்தோணியார் தமது மொழியில் பேசுவதைப் போன்று புரிந்துகொண்டனர். 

அன்று பெந்தகோஸ்தே விழாவில் தூய ஆவியால் நிரப்பப்பட்டு திருத்தூதர்கள் பேசியதை பல்வேறு மொழியினர் தத்தம் மொழியில் கேட்டுப் புரிந்து கொண்டது போல் அந்தோணி யார் பேச்சையும் பலமுறை என கேட்டு புரிந்து மகிழ்ந்தனர். இதைக்கேட்ட திருத்தந்தை அவர்களும் மக்கள் அனைவரும் வியப்படைந்தனர். புனித அந்தோனியாரின் மறை யுரை  இறையியல் தத்துவத்துடன் கூடியது. இனியது, எது சரியானது, பொருத்தமானது, புரியும்படியான எழுச்சி தருவது, உள்ளம் கவர்வது, ஊக்கம் தருவது, தெளிவு தருவது, மென்பொருள் உரைப்பது, இதமானது, அழகானது, என பன்முகங்களைக் கொண்ட எழுச்சிமிக்க உரையைக் கேட்டு பல்லாயிரக் கணக்கானோர் மனந்திரும்பின, இது கடவுளின் மகிமைக்கு  சான்றாக விளங்கியது.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .