பிரான்சிஸ்கு சபை துறவிகளின் பெரிய கூட்டமொன்று ஆர்லஸ்என்னும் ஊரில் நடைபெற்ற கூட்டத்தின் ஒரு பகுதிக்கு அந்தோணியார் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கூட்டத்தில் சிறப்பு உரை ஒன்றும் ஆற்றவும் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் அந்தோணியார் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அசிசி மடத்தில் நோயுற்று படுக்கையில் இருந்த பிரான்சிஸ் அசிசியார் அங்கு வந்ததாக கூட்டத்தில் இருந்தவர்கள் கண்டனர். பின்பு ஒருநாள் அசிசியார் சாகும் தருவாயில் ஆர்லஸ் கூட்டத்தில் அந்தோணியார் உரையாற்றும் சமயம் அசிசியாரை கூட்டத்தில் இருந்தவர்கள் கண்டனர். அசிசியாரின் அன்பைப் பெற்ற அந்தோனியாருக்கு " பிரான்சிஸ்கோவின் குமாரன்" என்ற பெயர் வழங்கலாயிற்று.
இளம் துறவியின் மனமாற்றம் ஊரிலுள்ள சபை படத்தில் பீட்டர் என்னும் இளம் துறவி ஒருவர் இருந்தார். அவர் தவத்தை விட்டுவிட்டு இல்லறம் நடத்த ரகசியமாக மடத்தை விட்டு ஓடிவிட வேண்டும் என எண்ணினார். இவரது எண்ணத்தை தூய ஆவியின் துணையால் தெரிந்து கொண்ட அந்தோணியார் அந்த சகோதரர் தேடிச் சென்று துறவத்தில் நிலைத்திருக்கும்படி அறிவுரை கூறினார். " இதோ திடமும் ஞானமும் கொடுக்கும் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளும்" என்று அவர் மேலும் ஊதினார். உடனே அந்த சகோதரர் மயக்கமுற்று கீழே விழுந்து மரித்தவர் போல் காணப்பட்டார். அப்போது துறவி விண்ணகம் ஆட்சியையும் அழகையும் காட்சியைக் கண்டார். அதன்பின் அந்த சகோதரர் அலகையின் மாயையை நீங்கப் பெற்றவராய் துறவறத்தில் நிலைத்திருந்து பணியாற்றி வந்தார். இந்நிகழ்ச்சியை மற்ற இளம் துறவிகளுக்குக் கூறி கடவுளுக்கு பயந்து வாழ்க்கை யை எதிர்த்து நில்லுங்கள். அப்போது அது உங்களிடம் இருந்து ஓடி போகும். யாக்கோபு 4 அதிகாரம் 7 ஆம் வசனம் என்ற வரிகளைக் கூறி அவர்களை திடப்படுத்தினார்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். மேலும் எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .