Monday, October 8, 2018

அற்புதம் - 17. இடிந்தாலும் இழப்பில்லை.


சிறந்த மறையுரை யாளரான புனித அந்தோணியார் மறை உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் அவரின் மறை உரையைக் கேட்க கூடியிருந்தார்கள். மறை உரைக்கு நடுவே அந்தோணியார் திடீரென " இப்போது சாத்தான் இந்த மேடையை எடுத்து விடுவான் ஆனால் நீங்கள் அஞ்சவேண்டாம் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படாது" என்றார். அதேபோல பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது அந்தோணியார் கூறியது போல் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை. மக்கள் எல்லோரும் கடவுளுக்கு நன்றி கூறினர். அந்தோணியாரை சோதனையில் விழுத்தாட்டவும் அவரைத் தன் பக்கம் இழுக்கும் அவரை அழிக்க தான் தக்க சமயம் பார்த்து கொண்டிருந்தான். 
தீயோனின் இந்த தீய திட்டம் அதை அந்தோணியார் அறிந்திருந்தது மட்டுமல்ல. "சாத்தானை எதிர்த்து நில்லுங்கள் அப்போது அவன் உங்களை விட்டு ஓடிப் போனான்" என்று கூறி அவனை வென்றார்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்காக  செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .