Monday, October 1, 2018

அந்தோணியாரின் இறுதி நாட்கள்.



அந்தோணியாரின் இறுதி நாட்கள்.

அந்தோணியார் பதுவா நகருக்கு போதித்து வந்த போது உடல் நிலை மிகவும் மோசமானது. எனவே அவர் தனது இறுதி நாட்கள் அருகில் இருப்பதை உணர்ந்தார். தன்னை பதுவா நகருக்கு கொண்டு செல்ல கேட்டு கொண்டார். 

ஆனால் அவர் பதுவா வருவதற்கு முன்பே Arcella என்னும் ஊரிலே தனது 35 வயதில் இறந்தார். 

அவர் இறந்த ஒரு வருடத்தில் அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதை அப்போது போப் ஆகா இருந்த Gregory IX அந்தோணியாருக்கு புனிதர் பட்டம் கொடுத்தார்..

1263 ஆம் ஆண்டு அவரது கல்லறையில் இருந்து அவரது புனித பண்டங்களை எடுப்பதற்காக கல்லறையை திறந்தனர். என்ன ஆச்சரியம் அவரது உடல் எல்லாம் அழிந்து போயிற்று. ஆனால் அவரது நா மட்டும் அழியாமல் அப்பிடியே இருந்தது. அவர் இறந்தது 1231. இன்றும் சர்வேசுரனை பற்றி மக்களுக்கு போதித்த அவரது நா அழியாமல் பதுவா நகரிலே அவரது ஆலயத்தில் உள்ளது.


அர்ச் அந்தோணியாரின் சுருபதையோ அல்லது அவரது படங்களை பார்க்கும் போது இரண்டு ஒற்றுமைகளை பார்க்கலாம்.

1. அர்ச் அந்தோணியார் கையில் இருக்கும் குழந்தை சேசு.

அர்ச் அந்தோணியார் தன் நண்பன் திசே என்பவருடைய வீட்டில் ஜெபித்து கொண்டு இருக்கும் போது குழந்தை சேசு அவருக்கு தோன்றி அவருடன் விளையாடி கொண்டு இருந்தது. அதை அவர் நண்பர் கதவு சாவி துவாரத்தின் வழியே பார்த்தார். அதனை அறிந்த அந்தோணியார் தான் சாகும் வரை அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கி கொண்டார்.

2. அவரது கையில் உள்ள லில்லி மலர்.

1680 வது வருடம் ஆஸ்திரியா நாட்டில் உள்ள கோவிலில் அவரது திருநாள் அன்று ஒரு நபர் லில்லி மலரை அந்தோணியாரின் சுருபத்தில் வைத்து விட்டு சென்றார். கொஞ்ச நாள் கழித்து அந்த லில்லி வாடாமல் இரண்டு புதிய பூக்கள் பூத்திருந்தன.



இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்கா செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும் .