அந்தோணியார் மரிக்கும் தருவாயில் தனது நண்பரான வேர்செல்வி மடத்து மேலாளர் தாமஸ் என்பவர் தோன்றினார். அப்போது அவர் தொண்டை நோயினால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். அந்தோணியார் சிரித்த முகத்துடன் அவருக்குத் தோன்றி நான் உங்களிடம் விடைபெற்றுக் கொள்ளுகிறேன். இதோ நான் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறிவிட்டு, நண்பரின் தொண்டையைத் தொட்டு பின்பு மறைந்து போனார். அவரது தொண்டைநோய் அந்தக் நொடியே அகன்றது அதற்குப்பின் அவர் நோயால் வருந்தியதேயில்லை.