Friday, November 30, 2018

இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்.



அந்தோனியாருக்கு 15 வயது நிரம்பியதும் மிகவும் அழகான வாலிபனாக வளர்ந்துவிட்டால் அரச குடும்பத்தை சேர்ந்தவர் அதிலும் அழகு அறிவு ஒழுக்கம் ஆகியவை கொண்ட பலமான வாலிபன் எனவே சிறந்த கவிஞனாக புகழ்பெற்ற பாடகராக அரசியல்வாதியாக திறமைமிக்க தளபதியாக இருந்தார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர் ஆனால் இவை அனைத்தும் பொய்யாக்கிவிட்டு உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர் 1 தெசலோனிக்கர் 5 24 என்ற இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டவராக புனித அகுஸ்தினார் சபையில் ஒரு துறவியாகி முழுமையாக இறைவனுக்காகவே வாழ விரும்பினார் அவருடைய இந்த முடிவைக் கண்டு அவரது பெற்றோர்கள் நபித்தோழர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் அந்தோணியார் அவர்களிடம் கூறியது இறைவன் விரும்புகிறார் என்று மட்டும்தான்.

Wednesday, November 28, 2018

அந்தோணியார் கடற்கரையில் தனியே பேச மீன்கள் கூடிவந்து கேட்டன.



கிட்டதட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புனிதரானவர் புனித அந்தோணியார், ஐரோப்பாவில் ஏகபட்ட அந்தோணி உண்டு, காட்டில் இருந்த அந்தோணி, எகிப்தில் இருந்த அந்தோணி என ஏராளம், இவர் இத்தாலியின் பதுவாவில் வசித்ததால் பதுவை அந்தோணி, ஆர் என்பது தமிழின் மரியாதைக்குரிய விகுதி, அந்தோணி+ஆர் ‍= அந்தோணியார் ஆனார்

போர்சுகல்லில் லிஸ்பன் நகரில், பெரும் பிரபு குடும்பத்தில்தான் பிறந்தார், அவர் பெயர் பெர்டினாண்ட். அக்காலத்தில் ஏகபட்ட துறவிகள் சபை நடத்தினர், தனி சபைகள் அல்ல, மாறாக போப்பாண்டவர் அனுமதியோடு நடந்தன‌

அப்படி முதலில் அகுஸ்தினார் சபையிலும், பின் பிரான்சிஸ்கன் சபையிலும் இருந்தார் , அங்குதான் இவர் பெயர் அந்தோணி என மாறியது, 24 வயதில் குருவானார், உலக இன்பங்களை வெறுத்தார்

துறவிக்குரிய உடை அணிந்தார், தலையினை ஒரு மாதிரி வட்டமாக மழித்து தன்னை அலங்கோல படுத்தினார், (இன்றும் அவரின் சொரூபங்களில் அதனை காணலாம்), ஜெபம், தவம் என இருந்த அந்தோணி முதலில் செய்தது சமையல் கூட பணி

அன்றொருநாள் பேசவேண்டிய குரு வராமல் போக, இறைவார்த்தை பேசி சமாளிக்கும் பொறுப்பு அந்தோணியாருக்கு வழங்கபட்டது, அன்று அவர் பேசிய அற்புதமான பேச்சு, மடத்தின் தலைவருக்கு பிடித்து போக வேகமாக பெரும் இடத்தினை பிடித்தார்

அன்றைய கிறிஸ்தவம் சிசிலி தீவு, மொராக்கோ போன்ற மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவிகொண்டிருந்தது, அந்தோணியார் அங்கு அனுப்பபட்டார்

அவர் வாழ்வின் பெரும் புதுமைகள் அங்குதான் நடந்தேறின,

சிறுவயது முதலே அவருக்கு இறைவனின் அருள் இருந்தது, சாத்தானுக்கும் அவருக்கும் பெரும் யுத்தமே நடந்தது, 5 வயது முதலே அவரை கொல்ல தேடிய சாத்தானிடம் இருந்து புதுமையாக அவர் தப்பியே வந்தார், ஆனாலும் ஆப்ரிக்க நாடுகளில் அவரின் புதுமை பெரும் ஆச்சரியமானது

அந்நாட்டு மக்கள் அவர் பேச்சை கேட்கவில்லை, மனமுடைந்த அந்தோணியார் கடற்கரையில் தனியே பேச மீன்கள் கூடிவந்து கேட்டன, அதன் பின் மக்கள் கேட்டார்கள்

நோயினை குணமாக்கியது, பேய்களை ஓட்டியது, குழந்தையினை பேசவைத்தது, இறந்தவர்களை உயிர்பித்தது என பெரும் அதிசயங்களை செய்தவாறே இறைவனை அவர் போதித்த்தார்

யாராலும், எந்த சக்தியாலும் அவரை தடுக்க முடியவில்லை, பெரும் பெயரும் புகழும் பெற்றாலும் மகா எளிமையாக இருந்தார் அவர்

ஆப்ரிக்க நாடுகளில் அவர் பெரிதும் மதிக்கபட காரணம், மக்களிடம் அவர் பேரம் பேசவில்லை, ஞானஸ்நானம் பெறுவாயா? இதனை செய்கின்றேன் என அவர் சொல்லவில்லை, மாறாக யாராவது அழுதால் அவரும் அழுதார், யாராவது நோயில் துடித்தால் அவரும் துடித்தார், தேவைபட்டவருக்கு எல்லாம் தன்னால் முடிந்த வகையில் ஜெபத்தால் உதவினார்

அம்மக்கள் சிந்தித்தனர், இவரே இப்படி என்றால் இவரின் கடவுள் எவ்வளவு நல்லவராக இருப்பார் என எண்ணியே கிறிஸ்தவத்திற்கு வந்தனர்

ஏழை முதல் பெரும் மன்னர்கள் வரை அவரை பணிந்து நின்றது இப்படித்தான், அவர் வாழ்வு அவ்வளவு அர்ப்பணிப்பு உள்ளதாய் இருந்திருக்கின்றது

யாரையும் அவர் கிறிஸ்தவராக மாற‌ வற்புறுத்தவில்லை, மாறாக அவர்கள் நம்மைபோல‌ மனிதர்கள், அவர்கள் தேவையில் உதவ வேண்டும் எனும் வகையிலே அந்தோணியாரின் பணி இருந்தது

எல்லா மக்களுக்கும் அவரை பிடித்திருந்தது, இயேசுவே குழந்தை உருவில் அவரோடு வந்து விளையாடினார், அற்புதங்களை செய்வது அந்தோணியாருக்கு மகா எளிதானது, இயற்கை அவர் முன்னால் கட்டுபட்டு நின்றது

கோடிகணக்கான அற்புதங்களை செய்ததால் அவர் கோடி அற்புதர் ஆனார்.. எந்த அற்புதமும் அவருக்கு சிரமம் அல்ல, அற்புதங்கள் அவரின் வார்த்தைக்காக காத்திருந்தன‌

கிறிஸ்தவ துறவிகளில் தனிபெரும் இடம் பிடித்த அந்த அந்தோணியார், தன் 36ம் வயதில் இதே ஜூன் 13ம் நாள் இறந்தார்

அவர் இறந்த பின்னும் அவரை நினைத்தவர்களுக்கு, அவர் துணை கேட்டவர்களுக்கு உதவினார், ஒரே வருடத்தில் கத்தோலிக்க திருச்சபை அவரை புனிதர் தரத்திற்கு உயர்த்தியது

கத்தோலிக்கத்தில் புனிதர் அடையாளம் பெற்றவர்களின் திருவுருவம் பீடத்தில் வைக்கபடும், மக்கள் அவர்களை கடவுளாக அல்ல, மாறாக கடவுளிடம் எங்களுக்காக வேண்டிகொள்ளும் என ஜெபிப்பார்கள்

முதன் முதலில் அப்படி அந்தோணியாரின் சுரூபம் முன்னால் வேண்டிகொண்டது யார் தெரியுமா? அவர்களின் பெற்றோர்கள்

இதனை விட பெரும்பேறு யாருக்கு கிடைக்கும், தன் மகனை தெய்வம் என வணங்கும் பேறு அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது

கிறிஸ்தவம் உலகெல்லாம் பரவ பரவ அந்தோணியாரும் பரவினார், இன்று உலகெல்லாம் அவருக்கு ஆலயங்கள், தமிழகத்தையே எடுத்துகொள்ளுங்கள் அவர் சொரூபமோ ஆலயமோ இல்லாத ஊர்கள் மிக குறைவு.

எல்லா மதத்திலும் அவருக்கு பக்தர்கள் உண்டு, மனதிற்குள் வழிபடும் ஏராளமான மாற்றுமத பக்தர்கள் உண்டு

கடலோடிகளுக்கும் , ஆபத்தான மீணவதொழில் செய்பவர்களுக்கும் அவரே பாதுகாவல், கச்சதீவில் அந்தோணியார் ஆலயம் எழும்பியது அப்படித்தான்

வேளாங்கண்ணி போன்றே பெரும் புண்ணிய ஸ்தலமாக உவரி எனும் கடற்கரை கிராமம் திகழ்வதும் அப்படித்தான்

அந்தோணியார் மறைந்து நெடுங்காலம் கழித்து அவரின் கல்லறையினை தோண்டினார்கள், அவரின் எலும்பும் அவரின் நாக்கும் அழியாமல் கிடைத்தன, எலும்பும் நாக்கும் இன்றும் பாதுக்காக்கபடுகின்றன‌

நாக்கு ஏன் அழியவில்லை என்றால், ஒரே விஷயம் அவர் பொய் சொன்னதில்லை, தன் பக்தர்களுக்கு கொடுத்த வாக்கை அவர் கைவிட்டதில்லை

“எங்கு என்னை நினைக்கின்றீர்களோ அங்கு உங்களுக்காக ஓடோடி வருவேன் என தன் பக்தர்களுக்கு அவர் உறுதியளித்திருந்தார்..” , அதனை இன்றுவரை என்றும் போல காத்துகொண்டிருக்கின்றார்

தன்னை நம்பிவருபவர்களை அவர் கைவிட்டதாக சரித்திரமே இல்லை, அவரின் ஆற்றல் அப்படி

அவரிடம் யாரும் பிரார்த்திக்கலாம், யாரும் கேட்கலாம், அதற்கு ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவனாகவோ, பைபிளை அலசி ஆராய்ந்த ஞானியாகவோ இருக்க அவசியமில்லை, பெரும் பாவியாக இருந்தாலும் , எந்த மதமாக இருந்தாலும், மனிதனாக இருந்தால் போதும்

உங்கள் கண்ணீரை கண்டுவிட்டால் ஓடிவந்து துடைப்பார், அப்படி பலன் பெற்ற சாட்சிகள் ஏராளம் உண்டு

அவர் ஆலயத்தில் அனுதினமும் கூடும் கூட்டமே அதற்கு சாட்சி, அவர்கள் பெற்றிருக்கும் நலமே அதற்கு சாட்சி

சில விஷயங்களை அனுபவத்தினால் மட்டுமே பெறமுடியும், நம்பிவரும் அனைவருக்கும் அவர் நலம் கொடுப்பார், அவருக்கு பேதமில்லை

சிறுவயதில் இருந்தே அந்தோணியாரை அனுதினமும் வணங்கி வந்ததால் அவர் மீதான பற்று அதிகம், , அவர் குடும்பத்தில் ஒருவராகவே இருப்பவர், ஊரைவிட்டு நீங்கும் பொழுது அவரை விட்டு வந்ததாகவே மனம் வலித்தது.

ஆனால் கோலாலம்பூரின் பிரமாண்ட ஆலயத்தில் அமர்ந்திருந்து அவர் என்னை வரவேற்றபொழுது இழந்த‌ சொந்தம் மறுபடி கிடைத்தது போன்றதொரு மகிழ்வு

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அவ்வாலயம் சென்று வருவதுண்டு, அங்கு சென்றாலே சொந்த ஊருக்கு சென்ற ஒரு நிறைவு

புனித அந்தோணியாரின் வாழ்வு திரைப்படமாக தமிழகத்திலும் வந்திருந்தது, முத்துராமன் சிறப்பாக‌ நடித்திருந்தார் அவரை விட சிறப்பாக சாத்தான் வேடத்தில் உசிலை மணியும், ஒய்.விஜயாவும் நடித்திருந்தார்கள்.

கண்ணதாசன் மிக அற்புதமான பாடல்களை எழுதியிருந்தார், ஞானத்தின் உச்சியில் அவர் எழுதிய பாடல் “ஆனந்தமானது அற்புதமானது நான் அந்த மருந்தை கண்டுகொண்டேன்..” எனும் தத்துவபாடல்

அதில் இயேசு என்றோ, மாதா என்றோ, பைபிள் என்றோ ஒரு வார்த்தை வராது, கண்ணதாசனை நினைத்தால் ஏன் மனம் சிலிர்க்கும் என்றால் அவர் யாருக்கு பாடல் எழுதுகின்றாரோ அந்த நபர் எழுதியது போலவே இருக்கும், அவர் வரம் அப்படி

அப்படி அந்தோணியாரில் நிறைந்து , சாட்சாத் அந்தோணியின் வார்த்தைகளில் அவர் சொன்ன வரிகள் எந்நாளும் அந்தோணியார் ஆலயத்தின் அழைப்பிற்கு பொருந்தும்

திறந்திருக்கும் அந்தோணியார் ஆலயகதவுகள் அந்த வரியினைத்தான் சொல்கின்றன‌

“நம்பிக்கையுடனே இறைவனை தேடு
நாளைய பொழுதே அவன் வருவான்
நன்மை தீமையை அவனிடம் நாடு
நன்மையே மட்டும் அவன் தருவான்..”

அதுதான், அதேதான் நீங்கள் யாராயினும் உங்கள் துன்பநேரத்தில் அந்தோணியாரிடம் மன்றாடலாம், எதனையும் கேட்கலாம், உங்களுக்கு எது தேவையோ அதனை அவர் நிச்சயம் தருவார்.

முயற்சித்து பாருங்கள், உங்கள் துன்ப கண்ணீரை ஆனந்த கண்ணீராக மாற்றும் அற்புத சக்தி புனித அந்தோணியார் சொருபத்திற்கு உண்டு

அதனை ஏறேடுத்து பார்த்து மனமுருகவேண்டினாலே, உங்கள் அருகில் ஆறுதலோடு வந்து நிற்பார் புனிதர்

இன்று அவரின் திருவிழா, உலகெல்லாம் சிறப்பிக்கபட்டு கொண்டிருக்கின்றது, “புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்..” என்ற குரல்கள் கேட்டுகொண்டே இருக்கின்றன‌

புனித அந்தோணியார் நம் எல்லோருக்காகவும் வேண்டி கொள்ளட்டும்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்காக  செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும்

Tuesday, November 27, 2018

அற்புதம் 39 - மனம் திரும்பிய மாணவர்கள்.


1778 ஆம் ஆண்டு அந்தோனியார் பதுவை நகர முதன்முறையாக போனா அவர் போவதற்கு முன்பே அவரது பெயரும் புகழும் அங்கு பரவியிருந்தது பதிவை மக்கள் அவரை மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றனர்.

அக்காலத்தில் பதவி நகரில் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகம் ஒன்று இருந்தது இது ஐரோப்பாவில் மிகவும் பெயர் பெற்றது விளங்கியது பல ஊர்களில் இருந்து மாணவர்கள் அங்கு வந்து கல்வி பயின்றனர் பல கலாச்சாரங்களில் வளர்ந்த அந்த மாணவர்களை ஒழுக்கம் சீர் கெட்டிருந்தது அடிக்கடி போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் போன்ற நடந்துகொண்டிருந்தன இத்தகைய ஒழுங்கற்ற மாணவர்கள் அந்த நகரில் வசித்த பெரும் செல்வந்தர்களின் மக்களை நல்வழிப்படுத்த யாராலும் முடியாத காரியமாய் இருந்தது அங்குள்ள ஆயர் அந்தோணி அழைத்து அவர்களை நல்வழிப்படுத்த படி கேட்டுக்கொண்டார் இயேசுவை காலத்தில் தக்க மறையுரை ஆற்றியவர்களை மனந்திரும்பும் பொறுப்பு அந்தோணியாரிடம் கொடுக்கப்பட்டது அந்தோணியார் ஆலய அன்புடன் ஏற்றுக் கொண்டார் அந்தோணி அவருடைய மறையுரைகள் ஆச்சரியப்படும்படியாக வேலை செய்ய ஆரம்பித்தன நகர கல்லூரி மாணவர்களும் மக்களும் படித்திருக்கலாம் யாருக்கும் அடங்காtதவனாக இருந்தனர் நாங்கள் படித்தவர்கள் எல்லாம் தெரியும் என்ற மனநிலையை உடையவர்களாக இருந்தாலும் இவர்கள் ஒரு வினோத பிரியத்தால் வேடிக்கை பார்க்கும் பொழுது போக்குவதற்காக முதலில் அந்தோணியாரின் பேச்சைக் கேட்க கூடியிருந்தார்கள் அந்தோணியார் அமுத மொழிகளையும் கேட்க கேட்க மேலும் கேட்க வேண்டும் என்று அவர்களை ஆவலை தூண்டியது குறிப்பாக அவரது பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் படிப்பை பற்றி கவலைப்படாமல் அந்தோணியார் பேச்சைக் கேட்பதற்காகவே கூட்டம் கூட்டமாக வந்தன வரவர கூட்டம் அதிகரிக்கவே கோவில்களிலும் கல்லூரிகளில் இடம் இல்லாமல் அந்தோணியார் வெட்ட வெளியில் வந்த மழை உரை ஆற்றினார் அங்கும் இடம் பிடிப்பதற்காக 4 5 மணிநேரம் முன் கூட்டியே வர வேண்டிய நிலை இருந்தது நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூட்டத்திற்கு வந்த ஆயினும் எந்த வித சம்பந்தமும் இல்லாமல் கூட்டம் அமைதியாக நடந்தது அந்தோணியாரின் பேச்சைக் கேட்ட அனைவரும் இதயத்தை சுத்தமாக ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்றுச் சென்றனர் அல்லது ஆன்மீக வாழ்க்கை மேம்பட்டது அநியாய வட்டி வாங்கியவர்கள் ஏழைகளை ஏமாற்றுகிறார் பொருள்களை அபகரித்துக் கொண்டவர்கள் இவர்களுக்கெல்லாம் பரிகாரமாக தங்கள் சொத்துக்களை அந்தோணியார் பாதங்களில் வைத்து பாவமன்னிப்பு பெற்றவர்கள் கொள்ளைக்காரர்கள் முதலானோர் மனந்திரும்பிய தங்களது பெயர்களை வீட்டு வேலையை நேர்மையாளரான அரசு காலத்தில் 40 நாள்கள் முடிவதற்கு முன்பே அந்த நகரின் மக்கள் அனைவரும் நன்னெறியில் உலகம் முழுவதுமே கழகங்களில் ஏதுமின்றி சகோதரர்களைப் போல வாழத் தொடங்கினார்கள்.

Sunday, November 25, 2018

அற்புதம் 38 - தொண்டை தொட்டார் தொண்டு தொடர்ந்தார்



அந்தோணியார் மரிக்கும் தருவாயில் தனது நண்பரான வேர்செல்வி மடத்து மேலாளர் தாமஸ் என்பவர் தோன்றினார். அப்போது அவர் தொண்டை நோயினால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். அந்தோணியார் சிரித்த முகத்துடன் அவருக்குத் தோன்றி நான் உங்களிடம் விடைபெற்றுக் கொள்ளுகிறேன். இதோ நான் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறிவிட்டு, நண்பரின் தொண்டையைத் தொட்டு பின்பு மறைந்து போனார். அவரது தொண்டைநோய் அந்தக் நொடியே அகன்றது அதற்குப்பின் அவர் நோயால் வருந்தியதேயில்லை.

Saturday, November 24, 2018

அற்புதம் 37 - காணாமல் போயின காகித பாவங்கள்


ஆண்டவர் இலவசமாக வழங்கிய சாதனங்களில் நிலைபெற பெற்றது ஒப்புரவு அருள்சாதனம் என்ற தலைப்பில் மறையுரை மூலமே மக்களை மனந்திரும்பிய புனித அந்தோணியார் மழை உரையாற்றிக்கொண்டிருந்தார் அவர்களிடையே சிலரிடம் விசுவாச குறைவு காணப்பட்டதை உணர்ந்து நம்பிக்கை வைத்தால் மலையை நகர்த்தலாம் என்ற அவர்களுக்கு புரியும் வண்ணம் போதிக்கத் தொடங்கினார்.
 ஒப்புரவு என்னும் இவ்வாறு சாதனத்தை பெறுவதற்கு உங்கள் மனது என்னும் மலையே தடையாக இருப்பதால் தடையாய் உள்ள அந்த மலையை நகர்த்துவது என்று இதை புரிந்து கொள்ளுங்கள் அப்படியே அது தடையாக இருந்தாலும் கூட அதனை நகர்த்தி வைத்து விட்டு நகர முடியும் என்ற நம்பிக்கை தான் இங்கு உந்துவிசையாக உள்ளது அதுதான் தேவையான ஒன்று என்று மனது நமக்குத் தடையாக இருக்கும் மறைவான விஷயத்தை தாண்டி செல்வது என்று புரிந்து கொள்ளும்போது சில புதிர்கள் விலகுகின்றன உதாரணமாக ஒரு மலையை துளைத்துக்கொண்டு பாதை போட்டு மலை வழியாக வெளியே வரலாம் அல்லது மலைமீது ஏறி மறுபுறம் இறங்கி மழையை தாண்டிச் செல்லலாம் அல்லது மலையை சுற்றி கொண்டு மறுபுறம் போகலாம் இந்த மூன்று நீங்கள் எதை செய்தாலும் மழையை நகர்த்தி ஆக ஆகத்தான் பொருள் அதாவது ஓர் இடத்தில் இருக்கிற மலையை தூக்கி வேறு இடத்தில் வைக்க வில்லையே தவிர என்கிற எண்ணத்தை நகர்த்தி விட்டு அதை தாண்டி கொண்டு போக தெரிந்து விட்டது உங்களுக்கு ஒரு மலையை நடத்தியதற்கு சமம் இது உங்கள் மனதில் இருந்த அந்த மலை போன்ற பிரச்சனையைக் விட்டதாகத்தான் அர்த்தம் நம்மைத் தடுக்கும் தடைகளை தாண்டி வருவதற்குத்தான் மழையை நகர்த்துவது என்று பெயர் துணிச்சலும் உங்களுக்கு கூடாத காரியம் அல்ல.
 முதலில் பெரிய மலை போன்ற உங்கள் மனதை அழுத்தும் அந்த எண்ணங்களை சுக்குநூறாக்கும் எப்படி முதலில் உங்கள் பாவங்களை மனக்கண்முன் கொண்டு வாருங்கள் இரண்டாவது அப்படிப்பட்ட பாவங்களை செய்வதற்காக மனம் வருந்தும் மூன்றாவது அருட்பொழிவு செய்யப்பட்ட குருவிடம் கூறி மன்னிப்பு நான்காவது இப்படிப்பட்ட பாவங்களை இனி செய்ய மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் இப்படி உங்கள் மனதில் உள்ள மழையை உடைக்கப்பட்டு சமாதானம் ஏற்பட்டு விட்டது தவறு செய்வது மனித இயல்பு தான் மன்னிப்பது தெய்வ குணம் அவரிடம் அறிக்கையிட்டு என்று வல்லமையாக உணர்ச்சிபூர்வமாக நிறைவுரை ஆற்றினார்.

 அப்போது பலரும் ஒப்புரவு அருள்சாதனத்தில் பெற்றார்கள் அவர்களில் சிலர் அந்தோணியாரை நன்கு அறிந்திருந்ததால் இவரிடம் போய் நம் பாவங்களை அறிக்கை விடும் போது அவர் நம்மைப் பற்றிக் கொண்டுள்ள அவிப்பிராயம் மாறும் என்று கருதி மனம் வருந்தி உத்தம மனஸ்தாப பட்டாலும் நேரடியாக குருவிடம் கூற மனம் இல்லாமல் ஒரு தாளில் எழுதி பெயர் குறிப்பிடாமல் அந்தோணியாரிடம் கொடுத்தார்கள் அவரும் அதை வாங்கி ஜெபித்து ஆசீர்வதித்து அவர்களிடமே திருப்பி கொடுத்தா என்ன அவர்கள் இல்லம் திரும்பி திரும்பி பார்த்தபோது எல்லா பாவங்களும் அளிக்கப்பட்டு இருந்தது அந்தோணியார் செய்த அற்புதத்தை எண்ணி மகிழ்ந்து மற்றவர்களுக்கு இதை அறிவித்தார்கள்.

Friday, November 23, 2018

அற்புதம் 36 கிழிசல், கறை நீங்கியது



அந்தோனியாரின் மறையுரையைக் கேட்பதில் அளவற்ற ஆவல் கொண்டிருந்தார் ஒரு பெண் ஆனால் அவளது கணவனும் அதை விரும்பாதவன் இருப்பினும் அந்த பெண் கணவனுக்கு தெரியாமல் அந்தோணியாரின் மறை உரையை கேட்க வந்தாள்.

 ஒரு நாள் அவள் அவசர அவசரமாக அந்தோணியாரை உரையைக் கேட்க வருகையில் கீழே தடுக்கி விழுந்து, தன் ஆடையை கிழித்து கொண்டதோடு சேற்றில் விழுந்ததால் கரை ஏற்பட்டுவிட்டது.இந்த அலங்கோல நிலையில் வீட்டுக்கு சென்றால் தன்னை நிச்சயமாக கணவன் கோபிப்பார் என்ற பயத்தால் அவள் அந்தோணியாரிடம் சென்று அழுதாள். அந்தோனியார் இறைவனை வேண்டி அவளது ஆடையை தொட அவரது ஆடையிலிருந்த கிழிசல் மறைந்தது கரையும் நீங்கியது.

Thursday, November 22, 2018

அற்புதம் 35 கந்துவட்டிக்காரன் ஐயே கதறிட செய்தா





அக்காலத்தில் பதுவை நகரில் அநியாய வட்டி வாங்குதல் அதிகரித்து வந்தது வட்டியையும்தொகையும் சேர்த்து கொடுக்க முடியாமல் திண்டாடினார் அவற்றை வசூலிப்பதற்காக அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினர் சிறையிலடைத்தும் துன்புறுத்தினர் அந்த ஏழை மக்களின் தன்மையை அந்த பணக்காரர்களின் இரக்கமற்ற இதயங்களையும் அந்தோணியார் புரிந்துகொண்டார்.

சமுதாய அக்கறை கொண்ட அந்தோணியார் அரசு அதிகாரிகளை சந்தித்து தனது நாவன்மையால் ஏழைகளின் கடன் நிவாரணம் பற்றி பேசினார் தமது அறிவுரைகளும் எழுத்து மூலமாக விண்ணப்பம் கொடுத்து சமூக மாற்றம் வேண்டி கடன் நிவாரணச் சட்டம் ஒன்று இது கிழக்கு.பி.1231 ஆம் ஆண்டு சட்ட வடிவம் பெற்று அமுலுக்கு வந்தது.

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் கடன்பட்டவர்கள் சிறைபடுத்தக்கூடாது அவரது சொத்துக்களை இரக்க இன்றி பறிமுதல் செய்யக் கூடாது அநியாய வட்டி வாங்கக்கூடாது மேலும் அந்தோணியார் விருப்பப்படி சட்டம் அமலுக்கு வருகிறது என்றும் சேர்க்கப்பட்டது அந்தோணியார் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடிய போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் 

ஏழைக்கு உதவி செய்கிறவர் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறார். அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார் நீதிமொழிகள் 19 :17 ஆம் வரிகளை எடுத்துக் கூறி ஏழைகளுக்கு தாராளமாய் கொடுக்கும் வேலைகளில் பணமில்லாத வேதனையில் துடிப்பதை அரவணைத்துக் கொள்ளும் படியும் சேவையிலுள்ள வேதனை ஏழைகளுக்கு உதவும் அன்பு வார்த்தைகளால் கந்துவட்டி வசூலில் அவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தினார் ஏழை எளிய மக்களுக்கு ஆறுதலும் பாதுகாவலரான தூய அந்தோனியார்.

Wednesday, November 21, 2018

அற்புதம் 33 மழலை போக்கிய மாபெரும் ஐயம்






தபசு காலம் முதற்கொண்டு தூய ஆவி திருநாள் வரைக்கும் அந்தோணியார் போது மழை உரையாற்றியும் அறிவுரை கூறியும் வந்தா சென்ற இடங்களில் எல்லாம் மக்களின் வாழ்க்கையை சீர்படுத்திக் சமாதானம் ஏற்படுத்தி வந்தார்.

பெராரா என்ற இடத்திற்கு மறையுரை ஆற்ற சென்றிருந்த சமயம் அந்நகரில் புகழ்வாய்ந்த குடும்பத்தை சார்ந்த ஒரு செல்வந்தன் தனது இளம் மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவள் பெற்ற குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கூறி அந்தோணியாரிடம் வந்து முறையிட்டான் தன் மனைவியையும் மனம் நோக பண்ணினான். இருவரையும் குழந்தையோடு அவர் வரச்சொன்னார் அவர்களிடம் இருந்த குழந்தையை வாங்கி தமது கரங்களில் ஏந்தி கொண்டு ஓ மாசில்லா குழந்தையே உமது பிறப்பின் உண்மையை எல்லோரும் வெளிப்படையாக அறியும்படி இயேசுவின் பெயரால் உனக்குக் கட்டளையிடுகிறேன் வாய்திறந்து பேசுவாயாக என்றார் உடனே குழந்தை சந்தேகம் கொண்ட தன் தந்தை பக்கமாய் திரும்பி இதோ இவரே என் தந்தை என வாய் திறந்து பேசியது. அப்போது அந்தோனியார் அந்த குழந்தையை அதன் தந்தையிடம் கொடுத்து இதோ உன் குழந்தை இதன் மேல் அன்பு செலுத்துவாயாக இதோ இந்த தாய் குற்றமற்றவர் உன் மீது அன்பும் பாசமும் கொண்ட உன் மனைவி உன் அன்புக்கும் கீழ்ப்படிதலும் முற்றிலும் தகுதி உள்ளவராக இருக்கிறாள் அவளை நீ அன்பு செய்வாயாக என்றார் .

குழந்தையே வாய்திறந்து உண்மையை உரைக்கக் கேட்ட கணவன்னது சந்தேகத்தை முற்றிலும் விட்டொழித்து தனது மனைவி மீது சுமத்திய குற்றத்திற்காகவளிடம் மன்னிப்பு கேட்டான் அன்றுமுதல் கணவனும் மனைவியும் சமாதானமாகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

Tuesday, November 20, 2018

கோடி அற்புதர் பதுவை புனித அந்தோனியார் நவநாள்.


பதுவை பதியராம் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும், (மும்முறை)
குரு: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: பரிசுத்த திரித்துவத்துக்கு இப்பொழுதும் எப்பொழுதும் தோத்திரம் உண்டாவதாக

எல்: ஆமென்.

குரு: பரிசுத்த தேவதாயே எங்கள் துன்ப வேளையில் நாங்கள் உமது அடைக்கலத்தை தேடி உம்மிடம் வருகின்றோம். மகிமை நிறைந்தவளும் மாசில்லாதவளுமான கன்னிகையே, எங்கள் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், எல்லா ஆபத்துகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும்.

எல்: ஆமென்.

புனித அந்தோனியாரை நோக்கி வேண்டுதல் ஜெபம்

எல்: இப்புண்ணிய ஷேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோனியாரே ! பரிசுத்தத்தனம் விளங்கும் லீலியே ! விலைமதிக்கப்படாத மாணிக்கமே ! பரலோக பூலோக காவலரே ! கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே ! பாவிகளின் தஞ்சமே ! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோனியாரே ! சூரத்தனமுள்ள மேய்ப்பரே ! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே ! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே ! இவ்உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ ! எங்கள் தஞ்சமும் நீரல்லவோ ! எங்கள் சந்தோஷமும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ ! நீர் எங்கள் ஞானத்தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர்கள் பாராட்டுவார்களோ, உம்மைத் தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும்; அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பெயரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூயதான தயாபரமே ! தயைக்கடலே ! தவிப்பவர்களுக்குத் தடாகமே ! தனித்தவருக்குத் தஞ்சமே ! உமது இன்பமான சன்னிதானம் தேடிவந்தோம். ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடிவந்தோம். துன்பம், பிணி, வருமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயன் அற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ ஐயா, எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக்கொடுக்கிறோம். எங்களைக் கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் -ஆமென்.

செபிப்போமாக:

சர்வேசுரா சுவாமி ! புனித அந்தோனியாரை வணங்கி அவருடைய சலுகையை இரந்து, சாஷ்டாக்கமாக விழுந்து கிடக்கிற யாத்திரிகர்களாகிய அடியோர்கள் பேரில் தயை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்.

புனித அந்தோனியார் பிராத்தனை:

சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே கிருபையாயிரும்

சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை

தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை

தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே -எங்களுக்காக

பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக

பரமண்டல திருவின் திருப்பெட்டியான புனித அந்தோனியாரே -எங்க....

மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோனியாரே

தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோனியாரே

தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான புனித அந்தோனியாரே

தூய்மையில் லீலிமலரான புனித அந்தோனியாரே

சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான புனித அந்தோனியாரே

இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான புனித அந்தோனியாரே

சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான புனித அந்தோனியாரே

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோனியாரே

அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோனியாரே

புண்ணியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோனியாரே

மீனாரென்கிற சந்நாசிகளுக்குப் படிப்பனையாகிய புனித அந்தோனியாரே

அப்போஸ்தலருடைய கொழுந்தான புனித அந்தோனியாரே

பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான புனித அந்தோனியாரே

வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான புனித அந்தோனியாரே

ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோனியாரே

குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோனியாரே

ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான புனித அந்தோனியாரே

பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோனியாரே

அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோனியாரே

வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோனியாரே

மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோனியாரே

பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான புனித அந்தோனியாரே

காணமற்போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே

இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான புனித அந்தோனியாரே

வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான புனித அந்தோனியாரே

பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான புனித அந்தோனியாரே

தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோனியாரே

சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோனியாரே

அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான புனித அந்தோனியாரே

புண்ணிய மென்கிற ஞானவெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோனியாரே

உலகம் என்கிற அப்பத்தைப புறக்கணித்தவரான புனித அந்தோனியாரே

சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான புனித அந்தோனியாரே

சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான புனித அந்தோனியாரே

எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான புனித அந்தோனியாரே

நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான புனித அந்தோனியாரே

நன்நாக்கழியாத நற்தவத்தினரான புனித அந்தோனியாரே

புதுமைகளினால் பிரபல்யியமான புனித அந்தோனியாரே

திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோனியாரே

ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோனியாரே

சிறு குழந்தை சுரூபத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின புனித அந்தோனியாரே

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே

எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே

எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே

எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருவிக்கிறவருமாய் பாவ அக்கினியுடைய சாந்தியை சீக்கிரத்திலே அமர்த்துகிறவரும் உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பிதாவானவர். இம்மையினுடைய அவதிக்கு பிற்பாடு எளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருளவேண்டுகிறோம்.

இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக,

பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:

சர்வேசுரா சுவாமி ! உமது ஸ்துதியரும் முத்தப்பேறு பெற்றவருமான தூய அந்தோனியாரை ஸ்துதிக்கிற உமது புனித பத்தினியான திருச்சபையின் பிள்ளைகளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்திய பேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். -ஆமென்.

அனுகூலமடைய செபம்:

ஓ ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே ! மெய்யான தாழ்ச்சியின் கண்ணாடியே! பரிசுத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ ! மகிமையிலங்கும் புனித அந்தோனியாரே ! உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளி வாரும். விஷேசித்த சுதந்திரம் பெற்று அகமகிழ்தீரல்லோ ! அதுபோல் வல்லமையுள் ள உம்முடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய் பிரகாசிக்கிறதல்லவோ ! தேவரீர் என்பேரில் இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்.....

(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)

அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் புறத்தியாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய் நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக்கடவேனாக. -ஆமென்.

பேய் ஓட்டுகிறதற்கு செபம்:

இதோ ஆண்டவருடைய சிலுவை; சத்துராதிகளாகிய நீங்கள் அகன்று போகக்கடவீர்கள்.

அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா ! யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் சந்ததியுமானவர் ஜெயங்கொண்டார். அல்லேலூயா!

நரக வல்லமையை அடக்கின புனித அந்தோனியாரே ! இயேசு கிறிஸ்துநாதருக்கும் சத்திய வேதத்திற்கும் சத்துராதிகளாய் இருக்கிறவர்கள் எல்லோரையும் சிதறடிப்பதுமல்லாமல் துன்மார்க்கங்களையும் துர்க்குணங்களையும் நிர்மூலமாக்கும்படி உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.

Monday, November 19, 2018

அற்புதம் - 32. கொடியவன் கொல்லப்பட்டான்.



பதுவை அந்தோனியார் இரண்டாவது முறையாக வந்தபோது அங்கு நிலைமை சரியில்லாமல் இருந்தது இது கட்சியினர் இடையே சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டிருந்தது அந்த நாட்டு மன்னனின் மகனான இயேசு படைத் தலைவனாக இருந்தான் அவன் ஒரு பயங்கர கொடுமைக்காரன் பெண்கள் குழந்தைகள் என பாராமல் எல்லோரையும் கொலை செய்யக்கூட அஞ்சமாட்டான் ரத்த வெறி பிடித்தவன் தான் படையெடுத்து கைப்பற்றிய நகர எல்லாம் கொள்ளையடித்து தீக்கிரையாக்கி அளித்தான் அதுமட்டுமல்ல சிறு பிள்ளைகளைப் பிடித்துச் சென்று கொன்றுவிடுவான் பயந்து போயிருந்த மக்கள் அந்தோனியார் வருவதாக கேள்விப்பட்டது ஆறுதல் அளிப்பதாக இருந்தது அந்தோணியாரிடம் அந்தக் கொடியவனின் கொடுமையை எடுத்துக் கூறினர்

இதைக் கேள்விப்பட்ட அந்தோனியார் முதல் வேலையாக வெரோனா நகருக்குச் சென்று அங்கு படைத் தலைவரை சந்தித்து அவனது வேண்டிய அறிவுரைகளை கூறியதோடு அவனை கடிந்து கண்டித்தும் பேசினார் கடைசியாக ஒரு எச்சரிக்கையும் கொடுத்தார் அவனைப் பார்த்து இரக்கமற்ற கூடியவனே இன்னும் எத்தனை நாள் மாசத்துல தங்களைச் இந்த போகிறாய் ஆண்டவரின் நீதி பட்டையும் இதோ உன் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது அவரது தண்டனை மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என எச்சரித்தார்

இதைப் பார்த்துக் கொண்டிருந்த படைத்தலைவனின் ஊழியர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர் தன்னுடன் வாதிட்டு எதிர்த்துப் பேசுவது அந்த இடத்திலேயே பேட்டி கண்ட துண்டமாக மேற்படி அவனவன் ஆனால் அந்தோணியாரின் இந்த கண்டன வார்த்தைகளையும் எச்சரிக்கைகளையும் கேட்டு மவுனமாக இருக்க காரணம் என்ன என வியப்புடன் கேட்டனர்.

மேலும் தான் சிறைபிடித்து இந்த சிறுவர்களை ஒரு நிபந்தனையும் இன்றி விடுவித்தான் தீச்செயல்கள் முற்றிலுமாக இயல்புக்கு மாறாக இருந்தன அது மட்டுமில்லாமல் என்றுமில்லாத சாந்தமும் அவன் முகத்தில் தோன்றியது இது எவ்வாறு எங்கனம் ஆயிற்று என அவனது கூட்டாளிகள் வியந்தனர்.

அதற்கு படைத்தலைவன் மறுமொழியாக அந்தத் துறவி யார் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய கண்களிலிருந்து மின்னலை ஒத்த ஒளிக்கதிர்கள் கிளம்பி அம்புபோல் பாய்ந்தன நான் அந்த நொடியிலேயே தலைகீழாக நகரத்தில் தள்ளப்படுவதை போல உணர்ந்தேன் மிகவும் அச்சத்தால் தாங்க முடியாத வேதனையை அனுபவித்தேன் அதனால் அவர் கேட்டதை எல்லாம் மறுக்காது கொடுக்க வேண்டியதாயிற்று.

என்றாலும் அவனது தீய எண்ணம் அவனை விட்டுப் போகவில்லை அந்தோனியாரே என்று நிரூபித்துவிட்டால் மக்களை அவரை துரத்தி விடுவார்கள் என்று அதற்கு ஒரு திட்டம் தீட்டினாள் தனது ஊழியர்கள் மூலம் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை கொடுத்து அனுப்பினான் அந்த ஊழியர்களிடம் இந்த வெகுமதிகளை அந்தோணியார் பெற்றுக் கொண்டால் அவரை அல்ல சன்யாசி என விளம்பரப்படுத்திக் கொண்டு போடுங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் கொண்டும் செய்யாமல் விட்டு விடுங்கள் என அவர் கூறியது போலவே அந்த பணியாளர்களிடம் சென்று எமது தலைவன் கொடுத்தனுப்பிய வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டு அவருக்காக இறைவனிடம் அந்தரங்கமாக கூறினார்.

அந்தோணியார் இவர்களின் கபட நாடகத்தை அறிந்துகொண்ட கோபத்தோடு அவர்களை நோக்கி நீங்கள் கொண்டுவந்து இந்த பொருட்களோடு இந்த இடத்திலிருந்து எழுந்து பொங்கல் இந்த துயரத்தை மாசு படுத்தாதீர்கள்.

ஏழைகள் ரத்தத்தை உறிஞ்சி அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட இந்த சொத்துக்கள் எனக்கு தேவையில்லை அருளப்பட்ட ரத்தத்தின் சப்தம் இறைவனை நோக்கி குரல் எழுப்புகிற அவன் சன்யாசியாக அபகரித்த எந்த சொத்தும் அதோடு அழிந்து போகும் என்று எச்சரித்தார்.

அப்போது அந்தோணியார் கண்களிலிருந்து மின்னல் ஒளி வீசுவதை இவர்களும் கண்டு நடந்தவற்றை தங்கள் தலைவனிடம் எடுத்துக் கூறினர் சில நாட்கள் கழித்து ஒரு போரில் அந்தக் கொடியவன் கொல்லப்பட்டான் இவனது மரணத்தால் மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர் அந்தோனியாருக்கு நன்றி கூறி நிம்மதியாக வாழ்ந்தனர் நகரை விட்டுச் செல்லும் போது பொதுமக்கள் அந்தோணியார் ஏழைகளுக்கு கொடுப்பது இறைவனுக்கு விருப்பமான வெகுமதிகளை வரும்போது இறைவனையே படைக்கிறோம் என்ற செய்தியும் கூறிவிட்டுச்சென்றார். தலமாக விளங்கும் தூய அந்தோணியார்.

 தன்னடக்கம் இல்லாத மனிதன் அரன் அழிந்து காவல் இல்லா பட்டினம் . நீதிமொழி 25:28.

Sunday, November 18, 2018

புனித அந்தோணியாரின் புதுமைகள்.



அர்ச் அந்தோணியார் வாழும் போது மட்டும் அல்ல அவர் இறந்த போதும் பல புதுமைகளை செய்தார் . அவருடைய புதுமைகளை பார்த்த திருச்சபை அவரை ஒரே ஆண்டில் அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தது. இனி நாம் அவருடைய புதுமைகளை பார்போம் .
அர்ச் அந்தோணியாரின் சுரூபத்தையோ அல்லது அவரது படங்களை பார்க்கும் போது இரண்டு ஒற்றுமைகளை பார்க்கலாம்.
1. அர்ச் அந்தோணியார் கையில் இருக்கும் குழந்தை சேசு.
அர்ச் அந்தோணியார் தன் நண்பன் திசே என்பவருடைய வீட்டில் ஜெபித்து கொண்டு இருக்கும் போது குழந்தை சேசு அவருக்கு தோன்றி அவருடன் விளையாடி கொண்டு இருந்தது. அதை அவர் நண்பர் கதவு சாவி துவாரத்தின் வழியே பார்த்தார். அதனை அறிந்த அந்தோணியார் தான் சாகும் வரை அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கி கொண்டார்.
2. அவரது கையில் உள்ள லில்லி மலர்.
1680 வது வருடம் ஆஸ்திரியா நாட்டில் உள்ள கோவிலில் அவரது திருநாள் அன்று ஒரு நபர் லில்லி மலரை அந்தோணியாரின் சுருபத்தில் வைத்து விட்டு சென்றார். கொஞ்ச நாள் கழித்து அந்த லில்லி வாடாமல் இரண்டு புதிய பூக்கள் பூத்திருந்தன.

சிறுவயதில் புனிதர்
அர்ச் அந்தோணியார் சிறு வயதிலே புதுமை செய்யும் வரம் பெற்று இருந்தார் அது என்ன என்றால் ஒரு முறை அவர்க்கு கோவிலுக்கு சென்று திவ்யபலி பூசை காண வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரது தந்தை அவரை வீட்டு தோட்டத்தில் பறவைகள் தானியங்களை சாப்பிடமல் அதை விரட்ட வேண்டு என்று அவர் தந்தை அவரிடம் சொன்னார். ஒரு பக்கம் திருப்பலிக்கு செல்ல வேண்டும் என்று ஆசை ஆனால் மறுபக்கம் பறவைகள். உடனே ஆண்டவரிடம் வேண்டினார் பறவைகளை எல்லாம்
அரண்மனைக்குள் செல்லுமாறு சொன்னார். அனைத்து பறவைகளும் அரண்மனைக்குள் சென்றது. அவர் சந்தோசத்துடன் திருப்பலி பூசை பார்க்க சென்றார். அவரது தந்தை வந்த போது அந்தோணியாரை தோட்டத்தில் காணவில்லை. தந்தைக்கு கோபம். ஆனால் அந்தோனியார் நடந்ததை சொன்னார். அரண்மனையில் இருந்து பறவைகளை வெளியே விட்டார்.
குருமடத்தில்
அந்தோணியாரை குருமடத் தலைவர் தன்னுடைய அனுமதி இல்லாமல் புதுமைகளை செய்யகூடாது என்று அவருக்கு உத்தரவு கொடுத்திருந்தார். ஒருநாள் சந்தைக்கு சென்று காய்கறி வாங்க அந்தோணியாரும் சக துறவியும் சென்றனர். அப்போது ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த ஒரு ஆள் கால் தவறி கிழே விழுவதை பார்த்த அந்தோணியார் உடனே அவனை நில் என்று சொன்னார். உடனே அவன் அந்தரத்தில் நின்றான். மடத்துக்கு வந்து தன் குருமட தலைவரிடம் நடந்தை சொன்னார். அவனை கிழே இறக்கிவிட அனுமதி கேட்டார். அதற்கு தலைவர் நீ என்னை கேட்காமலே ஏற்கனவே புதுமை செய்து விட்டாய் முதலில் சென்று அவனை கிழே இறக்கி விட்டு வா என்று தலைவர் உத்தரவு பெற்ற பின்பு அங்கு சென்று அவனை அந்தரத்தில் இருந்து கிழே இறக்கினார்.
                                                                                                                                 தொடரும்
இயேசுவுக்கே புகழ் !!! மாமரித்தாயே வாழ்க !!! தாயே நீரே எங்கள் தஞ்சம்

Saturday, November 17, 2018

அற்புதம் - 31. கூந்தல் வளர்ந்தது.




ஒரு பெண்ணின் கணவன் அவளை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். ஒருநாள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கணவன், தன் மனைவியை மூர்க்கத்தனமாக அடித்து வேகமாக கூந்தலைப் பற்றி இழுத்த போது, அவளது கூந்தல் அவன் கையோடு வந்துவிட்டது.
அந்தப் பெண் மிகவும் வேதனையுற்று செய்வதறியாது அந்தோணியாரை நாடி வந்து அழுது புலம்பினாள். அந்தப் பெண்ணின் வேதனையை கண்ட புனிதர் , புன்முறுவல் பூத்து மண்டியிட்டு இறைவனிடம் மன்றாடினார். அவளது கூந்தல் முன்புபோலவே வளர்ந்து விட்டது. அந்த பெண்ணின் வாட்டத்தைப் போக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, இந்தப் புதுமையை கண்ட அவளது கணவன் கடவுளின் கருணை அவள் மேல் எந்த அளவு உள்ளது என்றும், அவளுக்குத் தான் இழைத்த கொடுமையை உணர்ந்து வேண்டும் என்பதும்தான். அவர் எண்ணப்படியே அவன் திருந்தி நல்லவனாக மாறி குடும்பத்தோடு புனித இடம் வந்து ஆசி பெற்றுச் சென்றான்.

Friday, November 16, 2018

அற்புதம் - 30. உடல் பிண பெட்டியில் இதயம் பணப்பெட்டியில்.



அக்காலத்தில் இத்தாலி முழுவதும் எங்கு பார்த்தாலும் கலவரம் நடந்து கொண்டிருந்தது புனித பாரத நாட்டின் மன்னன் சார்பாக இருவருக்கும் அடிக்கடி கலவரங்கள் மூண்டன புனித பிரான்சிஸ்கு சபை நடத்திய மிகவும் கவலையை உண்டாக்கியது சமாதானத்தைக் கொண்டு வருவது அந்தோணியார் கொடுக்கப்பட்ட பணியாகும். 

பிரான்சிஸ் நகரில் அந்தோணியார் பேசும் இடமெல்லாம் வழக்கம்போல் பெருங்கூட்டம் வந்தது இருந்தாலும் மத வெறி அடங்கவில்லை சமாதானத்துக்கு அவர்கள் உடன்படவில்லை.

 இந்த சூழலில் அந்த ஊரில் ஒரு பெரிய செல்வந்தனிடம் தான் அவன் ஏழை மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான் கொடுக்காத ஏழைகளை கொடுமைப்படுத்தி வந்தான் செல்வம் மிகுதியாய் கழிந்த பின்பும் அவனுக்கு நிறைவு இல்லை அந்தோணியார் அவனுக்கு பலமுறை அறிவுரை கூறி வந்தார் அதற்கு சற்றும் செவி சாய்க்கவில்லை மனம் திரும்பாமலேயே இருந்தான்.

 ஒருநாள் அந்த செல்வந்தன் திடீரென இறந்து போன அவனது அடக்கத்திற்கான அழைத்தனர் அடக்கத்தின் போது உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் இதயம் இருக்கும் என்ற தலைப்பில் ஒருவரை உரையாற்றினார்.

 மக்களெல்லாம் செல்வந்தனை பற்றி அந்தோணியார் புகழ்ந்து பேசுவார் என எதிர்பார்த்தனர் ஆனால் வழக்கத்திற்கு மாறாக அவனது தவறுகளை சுட்டிக்காட்டினார் .

ஏழைகளை பிரிந்து துன்புறுத்தி இல்லாமல் வாழ்ந்த இவனது செயல்களை பற்றி பேசினார் அங்கு கூடியிருந்தவர்களிடம் இவனது இதையும் இப்போது இங்கில்லை பொங்கல் போய் அவனது பணப்பெட்டியில் தேடிப் பாருங்கள் அங்கே அவனது இதயம் இருக்கும் என உரைத்தார்.

 அவனது உறவினர் இவ்வார்த்தைகளைக் கேட்டு பெட்டியினுள் இருந்த அவனது உடலை பார்த்தனர் அவனது உடல் இருந்த இதயம் கிழிக்கப்பட்டிருந்தது அவர்களது விட்டாலும் ஆவல் மேலிட்டது பண பெட்டியை திறந்து பார்த்தபோது வகையில் அங்கே அவனது இதயம் துடித்துக் கொண்டிருந்தது இதை கண்டு அவர்கள் அஞ்சி நடுங்கினர் ஆசை எல்லாத் தீமைக்கும் ஆணிவேர் என்பதை உணர்ந்து மனம் மாறினர்.

Wednesday, November 14, 2018

பிள்ளைப் பருவம்.


புனித அந்தோணியார் 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் பிறந்தார் என்று பார்த்தோம் இவருடைய பெற்றோர்கள் அரச குடும்பத்தினர் எனவே மிகுந்த செல்வமும் செல்வாக்கும் கொண்டவர்களாக இருந்தார்கள் இவற்றுக்கெல்லாம் மேலாக நல்ல கிறிஸ்தவர்களாக விளங்கினார்கள் அவர்களைப் பார்த்துத்தான் அந்தோணியார் ஜெபிக்கவும் ஏழை எளியவர்கள் பால் அன்பு செலுத்தவும் கற்றுக்கொண்டார்.

 இவரின் தந்தை மாட்டின் திபியோன் லிஸ்பன் நகரில் ஆளுநர் இவர் நேர்மையாளர்கள் வீரம் மிக்கவராக இருப்பது இயற்கையே இவரது தாயார் பார்வதி அம்மாள் அழகு உள்ளவர் நற்குணங்கள் நிறைந்த தமிழ் இவரது தாய் தந்தையர் இட்ட பெயர் பெண்ணின் நான் லியோனி தூய பிரான்சிஸ் அசிசி சபையில் துறவியாக சேரும்போது எடுத்துக் கொண்ட பெயர்தான் அந்தோணியார் அதன்பின் கீர்த்தி என்ற பெயர் மறந்து போயிற்று ஏதும் இல்லாமல் பிறந்த அந்தோணியார் என்ற பெயரோடு இழந்தார் பெயர் வெறும் வார்த்தையாக இல்லாமல் அதை வரலாற்றில் பிறப்பிற்கு அர்த்தம் சேர்த்தார் புனித அந்தோணியார்.

அந்தோணியார் இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உண்டு கடைசி சகோதரியான மாரியம்மாள் இவரைப் போலவே துறவறம் பூண்டு கன்னிகை ஆனால் மற்ற மூவரும் இல்லறத்தில் நல்லறம் புரிந்தனர்.

புனிதர்கள் புனிதர்களாக பிறப்பதில்லை தாயின் வளர்ப்பில் உருவாக்கப்படுகிறார்கள் குழந்தைப் பருவத்திலிருந்து இவரது தாயார் இவருக்கு தாய்ப்பாலோடு ஞானப்பால் ஊட்டி வளர்த்த தாய் தந்தை பாடிய தாலாட்டு பாடல்கள் உலகம் முழுவதும் ஓம் மகிமை பொருந்திய ஆண்டவர் என்னும் தூய கன்னி மரியாவின் பாடலையே தாலாட்டுப் பாடலாக பாடி வழக்கம் பக்தி மிகுந்த அன்னையின் வளர்ப்பில் அந்தோனியார் பக்தியிலும் ஞானத்திலும் இவரை நேர்மையாளனாக வளர்த்ததில் தந்தை மாட்டின் பெரும் பங்கு வகித்தார்.

 நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்ந்தார் ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் அவர் மகிழ்ச்சியடைவார் நீதி 23: 24 என்ற விவிலிய வரிகளின்படி பெற்றோர் மகிழ்ந்தனர். சகல செல்வமும் குணங்களும் பக்தியும் நிறைந்துள்ள தாய் தந்தையருக்குப் பிறந்த ஆண் குழந்தை அழகும் குணநலன்களும் நிறைந்த இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை குழந்தையைக் கண்ட அனைவரும் அதை வாரி எடுத்து முத்தமிட ஆசை கொண்டணர்.

அந்தோனியாருக்கு ஐந்து வயது நிரம்பியதும் லிஸ்பன் மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளியில் சேர்க்கப்பட்ட இயற்கையிலேயே அறிவுமிக்க தான் அதனால் இலக்கணம் கணிதம் சமயம் சங்கீதம் பேசும் முறை எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை பற்றிய தெளிவை எளிதாகப் புரிந்துகொண்டு தன் மனதில் ஆழமாக பதித்துக் கொண்டார் படிப்பிலும் ஒழுக்கத்திலும் மட்டுமல்ல இறைப்பற்றும் ஞானமும் கொண்டவராகத் திகழ்ந்தார் ஆன்மீக காரியங்களில் நாட்டம் கொண்டவராக வளர்ந்த ஆலயத்திற்கு தவறாது செல்வதை இறைவனைப் போற்றும் பாடல்கள் பாடுவதிலும் திருப்பீட சிறுவனாக பணிபுரிவதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.
இயேசுவின் தாயான பரிசுத்த கன்னி மரியாள் மீது மிகுந்த பக்தி செலுத்தினார் இறைவழிபாடு என்பது பிறருக்கு உதவுவதில் தான் உள்ளது என்று எண்ணி தேவைப்பட்டோருக்கு சிறு சிறு உதவிகள் செய்து வந்தார் என்பதை சங்கிலித்தொடர்போல அன்பு பாசம் நேசம் போன்றவற்றால் கட்டப்பட்டிருக்கிறது எப்போதும் நம்மிடம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது வெளிப்படும் வரை தான் இந்த உலகம் வாழும் வரை என்பதை இளமைப் பருவத்திலேயே அவர் உணர்ந்திருந்தார்.

விதைத்ததே விருச்சம் ஆகிறது.

இது குழந்தைப் பருவத்திலேயே இவரது பெற்றோர்கள் இவரை அழைத்த இறைபக்தி என்பதை மறைத்து கிளைத்துத் அழைத்து அரும்பிப் பூத்த பயன்பட ஆரம்பித்தது தனது ஏழாவது வயதிலேயே தனது கற்பை கண்ணிமைக்கும் காணிக்கை ஆக்கினார் சிறுவயதிலேயே அருஞ்செயல்களால் ஒளி விடலாம் ஆனால் மற்ற அனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும் போது நிச்சயமாக உலகு சார்ந்த ஆசீர்வாதங்களை கல்வி செல்வம் அனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும் இந்த நல்லெண்ணத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு பெற்றோருக்கு தேவை பணம் அல்ல நல்ல மனம் தான்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும்.

Tuesday, November 13, 2018

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா



வரலாற்று பெருமை மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி ஒப்புக்கொடுத்தல் மற்றும் திருச்சொரூப பவனி என்பனவற்றுடன் உற்சவம் நிறைவு பெறும்.
இதில் கலந்து கொள்வதற்காக இன்று யாழ்ப்பாணத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் சுமார் 6ஆயிரம் பேர் கச்சதீவுக்கு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து 4ஆயிரம் பேரும் தமிழகத்திலிருந்து 2ஆயிரம் பேரும் செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
போர் ஆரம்பித்ததன் பின்னர் அங்கு தங்கியிருந்து உற்சவத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்க மறுத்து வந்த சிறிலங்கா அரசாங்கம் இம்முறை தமிழகத்திலிருந்து வருபவர்கள் ஒருநாள் தங்குவதற்கும் யாழ்ப்பாணத்திலிருந்து செல்பவர்கள் இருநாள் இரவு தங்குவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையிலான குருமார் திருப்பலியை ஒப்புக்கொடுப்பர்.
இம்முறை யாழ்ப்பாணத்திலிருந்து பெருந்தொகையானோர் செல்வதற்கு ஆர்வம் கொண்டிருந்த போதும் சுமார் 4ஆயிரம் பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் துறைமுகங்களிலிருந்து படகுகள் மூலம் நேற்றுமாலையிலிருந்து செல்ல ஆரம்பித்துள்ளனர். கடற்படையினர் மற்றும் கொழும்பிலிருந்து வந்த சுங்க அதிகாரிகள் பயணிகளை சோதனையிட்ட பின் படகுகளில் அவர்கள் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ளவென தமிழ்நாடு ராமேஸ்வரத்தில் இருந்து 82 படகுகளில் 2,271 பேர் இன்று காலை புறப்பட்டு சென்றனர். இவர்களுடன் தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை செய்;தியாளர்கள் பலரும் அங்கு சென்றுள்ளனர்
இராமேஷ்வரம் பங்குத்தந்தையிடம் ஏற்கனவே விண்ணப்பம் செய்திருந்தவர்களுக்கு மட்டும் இன்று அனுமதி வழங்கப்பட்டது. 
இவர்களின் கடல்பயணத்திற்கு பாதுகாப்பாக பாதுகாப்பு ஆடைகள் நேற்று மீன்வளத்துறை அலுவலகத்தால் வழங்கப்பட்டது.
இராமேஷ்வரத்திலிருந்து காலை 5 மணி முதல் பகுதி , பகுதியாக இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். படகு பயணத்தை மேற்கொள்வதற்கு முதல் புலனாய்வுதுறையினர் இந்திய குடிவரவு குடியகல்வுத்துறை அதிகாரிகள், தமிழக காவல்துறையினர் ஆகியோர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது சிலர் மறைத்து வைத்திருந்த மதுப்போத்தல்கள், பொலித்தீன் பைகள் உட்பட சில பொருட்களை சுங்கப்பகுதியினர் பறிமுதல் செய்தனர்.
கச்சதீவு அந்தோனியார் திருவிழா என்பதற்கு அப்பால் இருநாட்டு மக்களும் சந்தித்து பொருட்களை பண்டமாற்று செய்யும் இடமாகவே நீண்டகாலமாக இருந்து வந்தது.
இலங்கையிலிருந்து செல்பவர்கள் தேங்காய் எண்ணெய், சவர்காரம் ஆகியவற்றை எடுத்து சென்று அங்கு வரும் தமிழக மக்களிடம் பட்டுப்புடவைகள் உட்பட இந்திய உற்பத்தி பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வது வழக்கமாகும். இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சதீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்கு சொந்தமானது.
அப்போது சிறிலங்கா தலைமை அமைச்சராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா, இந்திய தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்திக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சதீவில் தமிழக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து திரும்பவும், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஒப்பந்தத்திற்கு முன்னர் அந்தோனியார் ஆலய நிர்வாகம் தமிழ்நாடு தங்கச்சிமடம் றோமன் கத்தோலிக்க பங்குத்தந்தையின் கீழ் இருந்த போதிலும் ஒப்பந்தத்தின் பின்னர் நெடுந்தீவு பங்குத்தந்தையே அதன் நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார்.
1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சதீவு திருவிழாவை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தியது. அதன்பின்னர் 2002ஆம் ஆண்டில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தையடுத்து உற்சவத்தை நடத்த அனுமதி வழங்கிய சிறிலங்கா அரசு அங்கு தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. உற்சவ தினத்தன்று செல்பவர்கள் அன்றே திரும்பிவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். தமிழகத்திலிருந்தும் வருபவர்களுக்கும் அனுமதி வழங்கவில்லை. இதனால் கச்சதீவு அந்தோனியார் திருவிழா கடந்தகாலங்களில் சோபிக்கவில்லை.
இம்முறை இருநாட்டு பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அந்தோனியார் திருவிழா கலகலப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
கச்சதீவு வரலாறு
கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க பரம்பரையைச்சேர்ந்த சேதுபதி குறுநில மன்னனின் கீழ் இருந்த தீவுக்கூட்டங்களில் கச்சதீவும் ஒன்றாகும். 69 கடற்கரை கிராமங்களும் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத்தீவு, நெடுந்தீவு, பள்ளித்தீவு ஆகிய தீவுகளும், சேதுபதி குறுநில மன்னனின் நிர்வாகத்தில் இருந்ததாக 1622-1635ஆம் ஆண்டுகால செப்பேடு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாக சென்னைப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இதன் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் சேதுபதி அரச வாரிசு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இத்தீவுகளும் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் தமிழகத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அந்தோனியார் கோவில் ஒன்றை கட்டியதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கச்சத்தீவு இராமநாதபுரம் அரச நிர்வாகத்திற்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடனத்தில் கூறியிருந்தார்.
எனினும் கச்சதீவு இந்தியாவை விட இலங்கைக்கு அண்மையில் இருப்பதால் அதன் நிர்வாகம் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று 1975ஆம் ஆண்டில் இருநாட்டு அரசுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது.
மனிதர்கள் நிரந்தரமாக வசிக்காத இந்த தீவு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் களைகட்டும். அண்மைக்காலமாக இந்த தீவும் இதனையண்டிய கடற்பிரதேசமும் சர்ச்சைக்குரியதாக மாறிவருகிறது.

Monday, November 12, 2018

புனித அந்தோனியார் நவநாள்






1. வருகைப்பா (நிற்கவும்)

பதுவை பதியராம் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும், (மும்முறை)

குரு: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.

குரு: பரிசுத்த திரித்துவத்துக்கு இப்பொழுதும் எப்பொழுதும் தோத்திரம் உண்டாவதாக
எல்: ஆமென்.

குரு: பரிசுத்த தேவதாயே எங்கள் துன்ப வேளையில் நாங்கள் உமது அடைக்கலத்தை தேடி உம்மிடம் வருகின்றோம். மகிமை நிறைந்தவளும் மாசில்லாதவளுமான கன்னிகையே, எங்கள் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், எல்லா ஆபத்துகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும்.

எல்: ஆமென்.


எல்: இப்புண்ணிய ஷேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோனியாரே ! பரிசுத்தத்தனம் விளங்கும் லீலியே ! விலைமதிக்கப்படாத மாணிக்கமே ! பரலோக பூலோக காவலரே ! கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே ! பாவிகளின் தஞ்சமே ! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோனியாரே ! சூரத்தனமுள்ள மேய்ப்பரே ! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே ! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே ! இவ்உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ ! எங்கள் தஞ்சமும் நீரல்லவோ ! எங்கள் சந்தோஷமும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ ! நீர் எங்கள் ஞானத்தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர்கள் பாராட்டுவார்களோ, உம்மைத் தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும்; அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பெயரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூயதான தயாபரமே ! தயைக்கடலே ! தவிப்பவர்களுக்குத் தடாகமே ! தனித்தவருக்குத் தஞ்சமே ! உமது இன்பமான சன்னிதானம் தேடிவந்தோம். ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடிவந்தோம். துன்பம், பிணி, வருமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயன் அற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ ஐயா, எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக்கோடுக்கிறோம். எங்களைக் கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் -ஆமென்.

செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி ! புனித அந்தோனியாரை வணங்கி அவருடைய சலுகையை இரந்து, சாஷ்டாக்கமாக விழுந்து கிடக்கிற யாத்திரிகர்களாகிய அடியோர்கள் பேரில் தயை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்.

இறைமக்களின் மன்றாட்டு (எழுந்து நிற்க)

குரு: ஜெபிப்போமாக – எங்கள் பாப்பரசருக்கும் ஆயர்களுக்கும், குருக்களுக்கும், நாட்டு தலைவர்கள், சமூகத்கலைவர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், விவேகத்தையும் அளித்தருள வேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: மக்கள் அனைவரும் சமுதாய சமாதானத்திலும், சமய ஒற்றுமையிலும் சகோதரரை போல் வாழ்கை நடத்த வேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: இத்திருத்தலத்தை நாடிவரும் பக்தர்கள் உமது திருவளத்தின்படி உடல் நலத்தில் நீடிக்கவும், மன அமைதியற்றோர் நிம்மதி அடையவும் வேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: தீய நிந்தனையிலிருந்தும், பேயின் சோதனையிலிருந்தும் நாங்கள் விடுதலை பெறவேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: நாங்கள் விரும்பும் கோரிக்கைகள் கைகூடவும், எங்களை எதிர்கொண்டு வரும் தீமைகள் விலகவும், என்றும் உமது ஆதரவு இருக்கவும் வேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: யாவராலும் கைவிடப்பட்டு நம்பிக்கை இழந்து நிற்கும் நெருக்கடியான வேளையில் எங்களுக்கு உதவவேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஜெபிப்போமாக

குரு: எல்லாம் வல்ல இரக்கமுள்ள இறைவா, உம் அளவிலா அன்புக்குரியவரும, உமது அருளின் துணையால் கோடி அற்புதரெனப்பட்ட புனித அந்தோனியாரை அண்டி வந்துள்ள யாதிரீகர்களான எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக

எல்: ஆமென்

பாடல் (நிற்கவும்)

மாநிலம் போற்றிம் தூயவனே
உந்தன் பாதாரம் நாடி வந்தோம்
கோடிஅற்புதரெனப் பகழ் பெற்றீர்-2
நாடிவரும் எம் குறை தீர்ப்பீர் (மாநிலம்)

இயேசுவை கையில் தாங்கியதால்
இறைவனின் அருளை அடைந்தீரே
மலைபோல் வரும் துயர் வாழ்வினிலே-2
நிலைகுலையாதிருக்க அருள்வீர் (மாநிலம்)

நற்செய்தி வாசகம் (நிற்க)

மறையுரை (அமர்க)

நோயாளிகளை ஆசீர்வதித்தல் (முழந்தாளிடுக)

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.

எல்: அவரே பரலோகத்தையும் பூலேகத்கையும் படைத்தார்.

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக

குரு: ஜெபிப்போமாக

எல்: ஆண்டவரே உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும். நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும். நாங்கள் துன்பங்களினால் தூய்மை அடைந்து, உமது இரக்கத்தினால் விரைவில் குணம் அடையும்படி அருள் புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக- ஆமென்.

குரு: (வலது கரத்தை நீட்டி) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்கு காவலாயிருக்க உங்கள் பின்னும், உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக. எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து உங்களை வழிநட்துவாராக.

எல்: ஆமென் (பின்னர் தீர்த்தம் தெளித்தல்)

காணாமல் போன பொருளை கண்டடைவதற்கு ஜெபம்

ஓ மகா உன்னத மகத்துவம் பொருந்திய அர்ச்சிஸ்ட அந்தோனியாரே! சகல நன்மைகளும் நிறையப்பெற்ற அப்போஸ்தலரே! தேவரீர் (காணாமற்போன பொருளைத் திரும்பக் கண்டடையத் செய்கிற) புதுமைகளைச் செய்யும் வரத்தை ஆண்டவரிடமாக அடைந்திருக்கிறீரே; (காணாமல் போன பொருளைத் திரும்பக் கண்டடையும்படி) உமது ஆதரவைத் தேடி வந்திருக்கிற அடியேனுக்கு இத்தருணத்தில் உதவி புரிந்தருளும். தேவரீரைக் கொண்டு இத்தகைய மேலான அதிசயங்களைச் செய்விக்கிற ஆண்டவரை நான் மேன்மேலும் மகிமைப்படுத்திக் கொண்டாடி வருகிறேன். -ஆமென்.

புனித அந்தோனியார் பிராத்தனை:

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பரமண்டலததிருவின் திருப்பெட்டியான புனித அந்தோனியாரே -எங்க….
மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோனியாரே
தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோனியாரே
தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான புனித அந்தோனியாரே
தூய்மையில் லீலிமலரான புனித அந்தோனியாரே
சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான புனித அந்தோனியாரே
இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான புனித அந்தோனியாரே
சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான புனித அந்தோனியாரே
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோனியாரே
அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ளியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோனியாரே
மீனாரென்கிற சந்நாசிகளுக்குப் படிப்பனையாகிய புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய கொழுந்தான புனித அந்தோனியாரே
பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான புனித அந்தோனியாரே
வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான புனித அந்தோனியாரே
ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோனியாரே
ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான புனித அந்தோனியாரே
பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோனியாரே
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோனியாரே
வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோனியாரே
மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோனியாரே
பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான புனித அந்தோனியாரே
காணமற்போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே
இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான புனித அந்தோனியாரே
பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான புனித அந்தோனியாரே
தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ணிய மென்கிற ஞானவெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோனியாரே
உலகம் என்கிற அப்பத்தைப புறக்கணித்தவரான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான புனித அந்தோனியாரே
சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான புனித அந்தோனியாரே
எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான புனித அந்தோனியாரே
நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான புனித அந்தோனியாரே
நன்நாக்கழியாத நற்தவத்தினரான புனித அந்தோனியாரே
புதுமைகளினால் பிரபல்யியமான புனித அந்தோனியாரே
திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோனியாரே
ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோனியாரே
சிறு குழந்தை ரூயஅp;பத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின புனித அந்தோனியாரே

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை; மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருவிதருகிறவருமாய் பாவ அக்கினவுடைய காந்தியைச் சீக்கிரத்திலே அமர்த்துகிறவரும் உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பதாவானவர். இம்மையினுடைய அவதிக்கு பிற்பாடு எளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருளவேண்டுகிறோம்.

இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக,

பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி ! உமது ஸ்துதியரும் முத்தப்பேறு பெற்றவருமான தூய அந்தோனியாரை ஸ்துதிக்கிற உமது புனித பத்தினியான திருச்சபையின் பிள்ளைகளளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்திய பேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். -ஆமென்.

அனுகூலமடைய செபம்:
ஓ ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே ! மெய்யான தாழ்ச்சியன் கண்ணாடியே! பரிசத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ ! மகிமையிலங்கும் புனித அந்தோனியாரே ! உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளி வரம் விNஷித்த சுதந்திரம் பெற்று அகமகிழ்தீரல்லோ ! அதுபோல் வல்லமையு;ள் உமமுடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய் பிரகாசிக்கிறதல்லோ ! தேவரீர் என்பேரில் இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்…..

(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)

அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் புறத்தியாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய் நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக்கடவேனாக. -ஆமென்.


பேய் ஓட்டுகிறதற்கு செபம்:

இதோ ஆண்டவருடைய சிலுவை; சத்துராதிகளாகிய நீங்கள் அகன்று போகக்கடவீர்கள்.

அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா ! யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் சந்ததியுமானவர் ஜெயங்கொண்டார். அல்லேலூயா!

நரக வல்லமையை அடக்கின புனித அந்தோணியாரே ! இயேசு கிறிஸ்துநாதருக்கும் சத்திய வேதத்திற்கும் சத்துராதிகளாய் இருக்கிறவர்கள் எல்லோரையும் சிதறடிப்பதுமல்லாமல் துன்மார்க்கங்களையும் துர்க்குணங்களையும் நிர்மூலமாக்கும்படி உம்மை மன்றாடுகிறோம். – ஆமென்.


இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்காக  செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும்.

Sunday, November 11, 2018

அற்புதம் - 29. அன்னைமரி அவருக்கு முன்



அந்தோனியாரின் அயராத பணியால் ஒருபக்கம் கலைப்பு. மறுபக்கம் சோதனை. அந்தோனியார் தூங்கும் வேளையில் அவரை விடாமல் தொந்தரவு கொடுத்தது. ஒருநாள் நெடுநேரம் ஒப்புரவு அருட்சாதனம் கொடுத்துவிட்டு களைப்பால் தூங்கும் போது, அவரது அருகே வந்து அவரது தொண்டையை பிடித்து நெறித்த நினைத்து தான், சிறு வயதாயிருக்கும் போது தம் தாய் பாடிய தாலாட்டு பாடலான "மகத்துவமிக்க ஆண்டவரே" என்ற பாடலை உரக்கப் பாடினாள். உடனே அலறிக் கொண்டு ஓடிவிட்டது. அறை முழுவதும் ஒளிமயமாக பிரகாசித்தது. ஒளியின் நடுவே அன்னை மரியாவை காட்சியாக கண்டார். சிறந்த பக்தரான அந்தோனியாருக்கு அன்னை காட்சி வியப்பில்லை.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்காக  செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும்.

Saturday, November 10, 2018

அற்புதம் - 28 தூரம் வென்ற வீர குரல்



நாவன்மையும் இறையருளும் ஒருசேரப் பெற்ற அந்தோனியாரின் அருள் செயல்களையும் அற்புதமான பேச்சுகளையும் கேள்விப்பட்ட ஒரு பெண்மணி ஒரு முறையாவது தானும் அவரது பேச்சை கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஆனால் துறவிகளின் மட்டிலும் மதத்தில் மிகவும் வெறுப்பும் பகையும் கொண்டிருந்த அவளது கணவனுக்கு பயந்து மறையுரை கேட்கும் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் இருந்தாள்
 ஒருநாள் தன் வீட்டிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் ஒரு மைதானத்தில் அந்தோணியார் பேச வருவதாக கேள்விப்பட்டால் அவரை நேரில் பார்க்காவிட்டாலும் அவரது மறையுரை ஒருமுறையாவது கேட்கலாம் என தனது வீட்டின் மாடியில் ஏறி அந்தோணியார் பேசிய இடம் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள் என்ன ஆச்சரியம் அந்தோணியார் அவ்வளவு தொலைவில் இருந்து பேசிக் கொண்டிருப்பது தனக்கு மிகவும் பக்கத்திலிருந்து கேட்பது போல் கேட்டது.

 மறையுரை முழுவதும் நன்றாகவும் தெளிவாகவும் கேட்டது தான் கண்டு அனுபவித்த இந்த அதிசயத்தை தன் கணவனும் காண வேண்டும் அதன்பின் நம்பிக்கை கொள்வான் என்று மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து நடந்தவற்றை தன் கணவனுக்கு கூறினால் அவன் கேட்கும் படி அவரை மாடிக்கு கூட்டி சென்றால் அந்தோணியார் பேசிக் கொண்டிருந்த திசை நோக்கிப் பார்க்கும் போது அவரது பேச்சு தெளிவாகவும் விவரமாகவும் இருவருக்கும் கேட்டது இதை கண்டு இருவரும் வியப்புற்றனர் இது அந்தோனியாரின் அருஞ்செயல் என உணர்ந்து அன்று முதல் இருவரும் அந்தோணியாரின் மீது விசுவாசமும் நம்பிக்கையும் அன்பும் பற்றுதலும் செம்மையாக வாழ்ந்து வந்தனர் ஆன்மாக்களின் இடத்திற்கு உழைப்பதே அந்தோணியாரின் பணி கடவுளின் கருணை இருந்தால் அவரும் செயல்கள் செய்ய முடிந்தது அடிமைப்பட்டவர்கள் மீட்பரான புனித அந்தோணியாரே உன்னை போற்றுகின்றோம்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்காக  செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும்.

Friday, November 9, 2018

தூய அந்தோணியாரை நோக்கி பொது மன்றாட்டு





எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.

புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும். உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்;ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.

எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும், மக்கள் யாவரும் மெய்யங்கடவுளைக் கண்டறிந்து, தக்க முறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும்.

எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்காக  செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும்.

Thursday, November 8, 2018

கிருபையுள்ள புனித அந்தோனியார் ஜெபம்


கிருபையுள்ள புனித அந்தோனியார், ஹெவன் அவளை நினைவு தினத்தில்இந்த, மேரி இம்மாகுலேட் பாதுகாப்பின் கீழ் பிறந்து ஒரு இளம் வயதில் அவளை பிரதிஷ்டைபண்ணினான்; உன் விரல் நீ பிரார்த்தனை கருதியே அங்கு தேவாலயம் பளிங்கு மீது தாக்கம் எந்த குறுக்கு அடையாளம், மூலம் ஆமா என்றான். ஓ, நாம், உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், எங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை ஒரு மென்மையான பக்தி, மற்றும் எங்கள் நரக எதிரி மீதான அனைத்து தாக்குதல்களையும் வெற்றிகொள்ளும் பலம் பெற.
எங்கள் பிதாவே, வாழ்க மேரி, என்னைப்பொறுத்தவரை
2.
கிருபையுள்ள செயிண்ட்! நீ பெருந்தன்மையும், ஐசுவரியமும், வசதிகளும் அற்ப மூலம் ஆபத்துக்களை மற்றும் உலகின் தூண்டுதல்களை இருந்து தப்பிக்க சிலாக்கியத்தைகிறது, மற்றும் செயின்ட் அகஸ்டின் நியதிகள் வழக்கமான சேர்ந்து; நாம், உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் எங்களுக்கு இதயம் பற்றின்மை மற்றும் உலக ஒரு உண்மையான அவமதிப்பு பெற.
எங்கள் பிதாவே, வாழ்க மேரி, என்னைப்பொறுத்தவரை
3.
கிருபையுள்ள செயிண்ட்! நீ நம்பிக்கை தியாகத்தை பாதிக்கப்படுகின்றனர் உன் இளமை இதயத்தில் எரியும் ஆசை உணர சிலாக்கியத்தைகிறது, இந்த நோக்கம் என்றான் தேவதை புனித பிரான்சிஸ் ஒழுங்கு நுழைய; நாம், உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் எங்களுக்கு தவம் மற்றும் அவமானம் ஆவி பெற.
எங்கள் பிதாவே, வாழ்க மேரி, என்னைப்பொறுத்தவரை
4.
கிருபையுள்ள செயிண்ட்! மிகவும் ஆழமான பணிவு உணர்வுகளை வழிநடத்தப்பட்ட, நீ உலகின் கண்களில் இருந்து உன்னையே மறைக்க உன் ஆட்சியில் அனைத்து எவருடன் கடவுள் திடீரென்று உன்னை அறிவியல் மற்றும் புனித ஒரு பெட்டியை என அழைக்கப்படும் செய்த போது; நாம், உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் எங்களுக்கு பணிவு பயிற்சி மற்றும் கடவுள் மறைத்து ஒரு வாழ்க்கை அன்பு கருணை பெற.
எங்கள் பிதாவே, வாழ்க மேரி, என்னைப்பொறுத்தவரை
5.
கிருபையுள்ள செயிண்ட்! அவரது வார்த்தை பாவ தேர்வு, தேவரீர் அவருக்கு பாஷையில் பரிசு, மற்றும் மிக அசாதாரண அற்புதங்களை வேலை சக்தியை பெறும்; நாம் தெய்வீக தூண்டுகோலாக விருப்பத்துடன் கேட்க மற்றும் பழம், தேவனுடைய வார்த்தை கொண்டு கேட்க எங்களுக்கு கிருபை பெற, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
எங்கள் பிதாவே, வாழ்க மேரி, என்னைப்பொறுத்தவரை
6.
கிருபையுள்ள செயிண்ட்! கடவுள் உன் தீவிர காதல் உனக்கு தெய்வீக குழந்தை இயேசு பெறும் உன் கைகளில் கட்டி அணைக்கவும் மகிழ்ச்சியாக சலுகை பெறவில்லை; நாம், உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் நேசிக்கிறேன், மற்றும் நமக்கு ஆழ்ந்த பற்று கொண்டு புனிதமிகு நற்கருணையில் அவரை பெற்ற அருள் பெற.
எங்கள் பிதாவே, வாழ்க மேரி, என்னைப்பொறுத்தவரை
7.
கிருபையுள்ள செயிண்ட்! நீ பேரிடியாகும் குழப்பு மற்றும் மண்டியிட மற்றும் அதுமட்டுமன்றி வணங்குகிறேன் ஒரு ஊமை விலங்கு இதனால் அவர்களுக்கு நற்கருணை இயேசு கிறிஸ்துவின் உண்மையான இருப்பை நிரூபிக்க அறிவேன்; நாம், உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் எங்களுக்கு பரிசுத்த நற்கருணை ஒரு கலகலப்பாக நம்பிக்கை கருணை பெற.
எங்கள் பிதாவே, வாழ்க மேரி, என்னைப்பொறுத்தவரை
8.
கிருபையுள்ள செயிண்ட்! ஆண்கள் வந்து, தேவனுடைய வார்த்தை கேட்க மறுத்த போது, நீ கரையில் கடல் மீன்கள் அழைத்து அவர்களுக்கு போதிக்க அறிவேன்; நாம், உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், எங்கள் மனம் மற்றும் தெய்வீக சத்தியங்களை இதயங்களை சரியான சமர்ப்பிப்பு பெற.
எங்கள் பிதாவே, வாழ்க மேரி, என்னைப்பொறுத்தவரை
9.
கிருபையுள்ள செயிண்ட்! அப்பாவி மக்களின் பாதுகாவலர்களாக, நீ ஒரு குழந்தை அதன் தாய் நினைவாக சேமிக்க ஒரு சில நாட்கள் பழைய பேச வேண்டும் அறிவேன்; நாம், உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் எங்களுக்கு வலுவான மற்றும் அநீதியான அடக்குமுறைகள் உள்ள தேவனுடைய சித்தத்தின்படி அடக்கம் என்ற அப்படியே பாதுகாக்கும் கருணை பெற நமது ஆன்மா அமைதி மற்றும் தூய்மை.
எங்கள் பிதாவே, வாழ்க மேரி, என்னைப்பொறுத்தவரை
10.
கிருபையுள்ள செயிண்ட்! ஒருமுறை, படுவா உள்ள போதிக்கும் போது, தேவரீர், ஒரு அழகான அதிசயம் மூலம், லிஸ்பன் அதே நேரத்தில் உன்னை கண்டுபிடிக்க பழியாக எதிராக உன் தந்தை பாதுகாக்க, மரணம் அவரை காப்பாற்ற; நாம், உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் எங்களுக்கு நாங்கள் அனைத்து காயங்கள் மன்னிப்பு மற்றும் நம் எதிரிகள் காதல் என்று கருணை பெற.
எங்கள் பிதாவே, வாழ்க மேரி, என்னைப்பொறுத்தவரை
11.
கிருபையுள்ள செயிண்ட்! உன் பிரார்த்தனை, உம்முடைய வைராக்கியமும், உம்முடைய தெய்வீக விவேகம், நீர் பேரிடியாகும் மற்றும் கடினமாக்கி பாவிகளை ஆயிரக்கணக்கான மாற்ற அறிவேன்; நாம் கடவுள் முற்றிலும் நம்மை கொடுக்க வேண்டும் என்று,, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் எங்களுக்கு உண்மையான மாற்ற கிருபை பெற.
எங்கள் பிதாவே, வாழ்க மேரி, என்னைப்பொறுத்தவரை
12.
கிருபையுள்ள செயிண்ட்! நமது தெய்வீக மீட்பர் என்ற சாயல் உள்ள, நீர் ஆன்மா முக்தியடைய உன் வாழ்க்கை செலவு அறிவேன்; நாம், உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் ஞானிகள் ஆக எங்களுக்கு கிருபை பெற, ஒரு மகிழ்ச்சியான இறக்க, உன்னையும் ஹெவன் அனைத்து புனிதர்கள் மற்றும் தேவதைகள் எப்போதும் இறைவனை துதிக்க.
எங்கள் பிதாவே, வாழ்க மேரி, என்னைப்பொறுத்தவரை
13.
கிருபையுள்ள செயிண்ட்! தேவனே, உம்மை தொடர்ந்து வேலை அற்புதங்களை அதிகாரத்தை கொடுத்து, மற்றும் துரதிர்ஷ்டம், கவலை, மற்றும் துயரத்தில் உன் உதவி செயலாக்க அந்த பிரார்த்தனை பதில் ஆதரவாக உள்ளது; நாம் மேரி, அவரது ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை, மூலம், இயேசு நமக்காக பெற, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்ன தேவனுடைய மகிமை மற்றும் நமது ஆன்மா நல்ல இருக்கும் என்றால்,, நாம் மிகவும் ஆர்வத்துடன் மற்றும் வட்டம் உம்மை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
எங்கள் பிதாவே, வாழ்க மேரி, என்னைப்பொறுத்தவரை


1. நீங்கள் அற்புதங்களை கேட்டால், இறப்பு, பிழை, அனைத்து அழிவுகள்,
தொழுநோய், பேய்கள் பறக்க,மற்றும் சுகாதார பலவீனங்களில் வெற்றியடைகிறது.
கோரஸ்:
கடல் கட்டுப்படுகிறது, விலங்குகளை உடைத்து, மற்றும் உயிரற்ற உடல் உறுப்புக்களை நீ மீட்க, நீ, இழந்து பொக்கிஷங்களை மீண்டும் காணப்படுகின்றன அதே நேரத்தில்போது இளம் மற்றும் பழைய உன் உதவி மன்றாடுகின்றனர்.
2. அனைத்து ஆபத்துக்களை உன் விண்ணப்பத்தை இல் மறைந்து, மேலும் direst தேவை விரைவில் வெளியேற செல்கின்றது; உன் சக்தி அறிவிப்பதிலோ தெரியும் யார் அந்த நாம்,நாம் Paduans சொல்கின்றன: "இந்த உமக்கு இருக்கும்."
கோரஸ்:
கடல் கட்டுப்படுகிறது, விலங்குகளை உடைத்து, மற்றும் உயிரற்ற உடல் உறுப்புக்களை நீ மீட்க, நீ, , இழந்து பொக்கிஷங்களை மீண்டும் காணப்படுகின்றன அதே நேரத்தில் போது இளம் மற்றும் பழைய உன் உதவி மன்றாடுகின்றனர்.
3. பிதா, குமாரன், பெருமை இருக்கலாம், பரிசுத்த ஆவி நன்மை.
கோரஸ்:
கடல் கட்டுப்படுகிறது, விலங்குகளை உடைத்து, மற்றும் உயிரற்ற உடல் உறுப்புக்களை நீ மீட்க, நீ, இழந்து பொக்கிஷங்களை மீண்டும் காணப்படுகின்றன அதே நேரத்தில் போது இளம் மற்றும் பழைய உன் உதவி மன்றாடுகின்றனர்.
நமக்காக, புனித அந்தோணி,
நாம் கிறிஸ்துவின் வாக்குறுதிகள் பிரயோஜனமில்லை செய்யப்படலாம் என்று.
எங்களுக்கு பிரார்த்தனை செய்வோம்.

கடவுளே! புனித அந்தோனியார், உமது பாவமன்னிப்பு மற்றும் டாக்டர் votive நினைவு, அவர் எப்போதும் ஆன்மீக உதவியுடன் அரணான இருக்கலாம் நித்திய மகிழ்ச்சி உடையவர்கள் தகுதி, உமது திருச்சபை மகிழ்ச்சியின் ஆதாரமாக இருக்கலாம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால். ஆமென்.  

இது பிடித்து இருந்தால் இப்பதிவை  ஷேர் செய்யயும். மேலும்  எனக்காக  செபிக்கவும் மற்றும் உங்கள் கருத்துகளை பகிரவும்.